புனிதர்
புனிதர், அல்லது தூயர் எனப்படுபவர் சமய நோக்கில் இவர் நன்மையை அல்லது விவாசத்தை வெளிப்படுகிறவராவார். இச்சொல் கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் பாவமற்றவரை அல்லது மோட்சம் சென்றதாக கருதப்படுபவர்களையும் மட்டும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக புனிதர் என்பவர் சமுதாயத்தால் நல்ல முன்னுதாரணமாக கணிக்கப்பட்டு, அவரது வாழ்க்கை ஏனையவரது வாழ்வின் ஈடேற்றத்துக்காக நினவு கூறப்படும். புனிதர் என்றச் சொல் சமய நோக்கில்லாமல் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன. புனிதர்கள் மக்களுக்காக கடவுளிடம் பரிந்து பேசுபவர்கள் என கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டம் தற்போது திருத்தந்தையால் மட்டுமே அறிவிக்கப்படுகிறது. இவ்வறிவிப்பு இறந்த ஒரு மனிதர், அங்கீகரிக்கப் பட்ட புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதனைக் குறிக்கும். புனித தோமையார், புனித சவேரியார், புனித பதுவை அந்தோணியார், புனித குழந்தை இயேசுவின் திரேசம்மாள், புனித அருளானந்தர், புனித செபஸ்தியார் போன்றவர்கள் முக்கியமான புனிதர்களில் சிலராவர்.