கிறிஸ்து பிறப்புக் காலம்

கிறித்தவ வழிபாட்டு முறைக் காலம்

கிறிஸ்து பிறப்புக் காலம் அல்லது கிறித்துமசுக் காலம் என்பது கிறித்தவ திருச்சபைகளில் கடைப்பிடிக்கப்படுகின்ற திருவழிபாட்டுக் காலங்களுள் ஒன்றாகும். பெறும்பான்மையான கிறித்துவப் பிரிவுகளில் இக்காலம் கிறித்து பிறப்பு பெருவிழாவின் முந்தைய நாளில் துவங்கி திருக்காட்சிப் பெருவிழா வரை உள்ள பன்னிரெண்டு நாட்கள் கொண்டாடப்படுகின்றது. ஆதலால் இக்காலமானது கிறித்துமசு கெரொல்களில் கிறித்துமசின் பன்னிரெண்டு நாட்கள் (Twelve Days of Christmas) என அழைக்கப்படுகின்றது.

திருவழிபாட்டு ஆண்டு
(கத்தோலிக்கம்)
திருவழிபாட்டுக் காலங்கள்
முக்கியப் பெருவிழாக்கள்

1970 முதல் நடைமுறைக்கு வந்த கத்தோலிக்க திருச்சபையின் திருப்பலி புத்தகம் மற்றும் திருப்புகழ் மாலையில் கிறித்து பிறப்பு பெருவிழாவின் முந்தைய நாளிலிருந்து ஆண்டவரின் திருமுழுக்கு விழா முடிய கிறிஸ்து பிறப்புக் காலம் என வரையறுக்கப்பட்டுள்ளது.

பல சீர்திருத்தத் திருச்சபையினர் இப்பண்ணிரெண்டு நாட்களோடு சேர்த்து திருக்காட்சிப் பெருவிழா முதல் ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா (பெப்ரவரி 2) முடிய 40 நாட்களையும் கிறித்துமசுக் காலமாகக் கொண்டாடுகின்றனர்.

இக்கலத்தில் கிறித்தவர்கள் தங்களின் வீடுகளையும் ஆலயங்கலையும் கிறித்துமசு மரம், கிறித்துமசு குடில், பெத்லகேமின் விண்மீனைக் குறிக்க அட்டை விண்மீன் முதலியவைகளைக்கொண்டு அலங்கரிப்பர்.