இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்

(ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் அல்லது அதிகாரப்பூர்வமாக ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் - விழா[1] என்பது விவிலியத்தில் குழந்தை இயேசுவை அதன் பெற்றோர் யோசேப்பும் மரியாவும் எருசலேமில் இருந்த கோவிலில் மோசேயின் சட்டப்படி ஆண்டவருக்கு அர்ப்பணித்த நிகழ்வினைக்குறிக்கும். இது 2 பெப்ரவரி அன்று ஆண்டு தோறும் விழாவாக கொண்டாடப்படுகின்றது. கிழக்கு மரபுவழி திருச்சபையில் உள்ள 12 பெருவிழாக்களில் இதுவும் ஒன்று.

இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்
விழா
இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் by Hans Holbein the Elder, 1500–01 (Kunsthalle, ஆம்பர்கு)
கடைபிடிப்போர்
வகைகிறித்தவம்
நாள்2 பெப்ரவரி

பல பாரம்பரியங்களில் இவ்விழா கேன்டில்மஸ் (Candlemas) என அழைக்கப்படுகின்றது. இவ்விழா திருப்பலிக்கு முன்பு எறியும் திரிகளோடு பவணியாக ஆலயத்துக்கு மக்கள் வருவர். ஆகவே இப்பெயர் வழங்கலாயிற்று. பல கிறித்தவ திருச்சபைகளில் இவ்விழா 40 நாட்கள் கொண்டாடப்படும் கிறித்துமசுக் காலத்தினை நிறைவு பெறச்செய்கின்றது. இங்கிலாந்து திருச்சபையில் இவ்விழா 2 பெப்ரவரி அல்லது 28 ஜனவரி முதல் 3 பெப்ரவரி வரை இடையில் வரும் ஞாயிறன்று கொண்டாடப்படும். .

கத்தோலிக்க திருச்சபையில், இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த நிகழ்வு செபமாலையின் மகிழ்ச்சி மறைபொருள்களின் நான்காம் மறைபொருள் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. காண்க திருப்புகழ்மாலை, 2 பெப்ரவரி.
இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்
முன்னர் புதிய ஏற்பாடு
நிகழ்வுகள்
பின்னர்