கிறெக் சப்பல்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

கிறெக் சப்பல் (பிறப்பு ஆகஸ்டு 7, 1948) முன்னாள் ஆஸ்திரேலியத் துடுப்பாளர். இவர் இந்திய துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். தான் ஆடிய முதல் ரெஸ்ற், தான் தலைமை தாங்கிய முதல் ரெஸ்ற் மற்றும் தான் ஆடிய கடைசி ரெஸ்ற் ஆகிய மூன்றிலும் சதங்களைப் பெற்ற அபூர்வ சாதனையாளர். வலது கைத் துடுப்பாளரான இவர் தான் ஆடிய 87 ரெஸ்ற்களில் 48 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணித் தலைவராக இருந்தார். 7110 ரெஸ்ற் ஓட்டங்களை 53.86 என்னும் சராசரியில் பெற்ற கிறெக் 24 சதங்களையும் பெற்றுள்ளார். ஓய்வுபெறும் போது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள் அதிக கேட்சுகளைப் பிடித்தவர் எனும் சாதனை படைத்திருந்தார்.[1] இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

சேப்பல், தெற்கு ஆஸ்திரேலியாவின் அன்லேயில் பிறந்தார். அடிலெய்டில் பிறந்த ஆர்தர் மார்ட்டின் மற்றும் கார்னிஷ் ஆஸ்திரேலிய குடும்பமான ஜீன் எலன் (நீ ரிச்சர்ட்சன்) ஆகியோருக்கு பிறந்த மூன்று மகன்களில் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.[2] இவர் சிறுவயதிலிருந்தே விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவரது தந்தை மார்ட்டின் அடிலெய்டில் ஒரு குறிப்பிடத்தக்க முதல் தர துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் தனது மகன் நடக்க பழகியவுடன் கையில் ஒரு மட்டையை கொடுத்து விளையாடச் செய்தார். அதே நேரத்தில் இவரது தாய்வழி தாத்தா பிரபல பன்முக வீரரான விக் ரிச்சர்ட்சன், தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு தலைவராக இருந்தவர் ஆவார்.[3] மூத்த சகோதரர் இயன் மற்றும் தம்பி ட்ரெவர் ஆகியோரும் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடினர்.

சேப்பல் செயின்ட் லியோனார்ட்ஸ் தொடக்கப்பள்ளியில் பயின்றார். அங்கு இவர் தனது எட்டு வயதில் தனது முதல் போட்டியில் விளையாடினார்.[4] இவர் நிறைய மென்பந்து போட்டிகளிலும் விளையாடினார்.பன்னிரண்டு வயதில், இவர் தனது முதல் நூறுகளை எடுத்தார் மற்றும் தென் ஆஸ்திரேலிய மாநில பள்ளி அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். சகோதரர் இயானைப் பின்தொடர்ந்து இளவரசர் ஆல்பிரட் கல்லூரியில் உதவித்தொகையுடன் சேர்ந்தார், அதற்கு முன்பு இவர் இரண்டு ஆண்டுகள் பாலிம்ப்டன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.இவரது மனம் பெரும்பாலும் வகுப்பின் போது துடுப்பாட்ட களத்தில் இருந்தது.[5] ஆஷ்லே வூட்காக் ஆகியோருடன் இணைந்து ஸ்காட்ச் கல்லூரிக்கு எதிரான முதல் இனைக்கு 300 ஓட்டக்களுக்கு மேல் எடுத்தார்.[5] முன்னாள் முதல் தர வீரர் செஸ்டர் பென்னட்டின் இளவரசர் ஆல்பிரட் சாப்பலின் துடுப்பாட்டப் பயிற்சியாளரானா இவர், சாப்பலை "எனது அனுபவத்தில் மிகச்சிறந்த பன்முக பள்ளி மாணவ துடுப்பாட்ட வீரர் ... இவர் விளையாட்டில் அதிக சாதனைகள் செய்வார்" என்று விவரித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில், துடுப்பாட்ட வீரராக இருப்பது, முழுநேர தொழிலாக இல்லாததால், சேப்பல் ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனம், ஒரு எண்ணெய் நிறுவனம் மற்றும் கோகோ கோலா அதிகாரி உட்பட பல்வேறு வேலைகளில் பணியாற்றினார்..[6] இவர் 1971 ஆம் ஆண்டில் நியூ சவுத் வேல்ஸில் உள்ள பெக்ஸ்லியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரான ஜூடித் எலிசபெத் டொனால்ட்சனை மணந்தார்.[7] இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன: மூத்த மகன் ஸ்டீவன் 1975 ஆம் ஆண்டில் பிறந்தார், 1977 ஆஷஸ் சுற்றுப்பயணத்திற்கு சாப்பல் புறப்படுவதற்கு சற்று முன்பு பெலிண்டா 1977 ஆம் ஆண்டில் பிறந்தார்,[7] மற்றும் இளைய மகன் ஜொனாதன் 1980 ஆம் ஆண்டில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே, ஜொனாதன் மென்பந்து தொடரத் தேர்ந்தெடுத்தார், இது இவரது தந்தை மற்றும் மாமாவும் குழந்தை பருவத்தில் விளையாடியது,[7] மற்றும் 2004 முதல் 2005 வரை இளையோர் மென்பந்து போட்டிகளில் விளையாடினார்.[8]

சான்றுகள்

தொகு
  1. Cashman, 1996, p. 102
  2. Wisden Cricketers Almanac 1973, accessed at: http://content-aus.cricinfo.com/australia/content/story/154520.html
  3. Cashman (1996), pp 448–9.
  4. McGregor, Adrian (1985):Greg Chappell, Collins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-00-217485-5. p12
  5. 5.0 5.1 "Chappell returns to the schoolyard to see next crop of stars". http://www.adelaidenow.com.au/messenger/sport/chappell-returns-to-the-schoolyard-to-see-next-crop-of-stars/news-story/2a4c419378cb843f024a2e5801564ddc. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. Benaud, Richie. "Cricketer of the Year 1973: GREG CHAPPELL". Wisden Cricketers Almanack 1973. பார்க்கப்பட்ட நாள் 23 August 2017.
  7. 7.0 7.1 7.2 . 
  8. https://www.baseball-reference.com/register/player.fcgi?id=chappe001jon

வெளி இணைப்பு

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறெக்_சப்பல்&oldid=3986693" இலிருந்து மீள்விக்கப்பட்டது