கிளாடியா கோல்டின்

கிளாடியா டேல் கோல்டின் (Claudia Dale Goldin, பிறப்பு: 14 மே 1946) ஒரு அமெரிக்க பொருளாதார வரலாற்றாசிரியர் மற்றும் தொழிலாளர் சார்ந்த பொருளாதார நிபுணர் ஆவார். இவர் தற்போது ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் என்றி லீ பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார். அக்டோபர் 2023 இல், "பெண்களின் தொழிலாளர் சந்தை விளைவுகளைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தியதற்காக" பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவு பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. [1] தனியாக அந்த விருதை வென்ற முதல் பெண்மணி இவர் ஆவார். [2]

கிளாடியா கோல்டின்
Claudia Goldin
2019 இல் கோல்டின்
பிறப்புமே 14, 1946 (1946-05-14) (அகவை 78)
நியூயார்க்கு நகரம், ஐக்கிய அமெரிக்கா
நிறுவனம்
துறை
விருதுகள்
ஆய்வுக் கட்டுரைகள்

ஆய்வுப்பணி

தொகு

இவர் “200 ஆண்டுகளாகப் பணியிடத்தில் பெண்களின் பங்கேற்பைப் பற்றி” ஆராய்ந்து படித்தார், தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி இருந்தபோதிலும், பெண்களின் ஊதியம் தொடர்ந்து ஆண்களுக்கு ஈடாகவில்லை மேலும், ஆண்களை விட பெண்கள் உயர் கல்வியைப் பெற்றாலும் ஒரு பிளவு இன்னும் உள்ளது என்பதைக் காட்டுகிறது.தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கேற்பு இந்த முழு காலகட்டத்திலும் மேல்நோக்கிய போக்கைக் கொண்டிருக்கவில்லை, மாறாக U- வடிவ வளைவை உருவாக்குகிறது என்று கோல்டின் காட்டினார். திருமணமான பெண்களின் பங்கேற்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் விவசாய சமூகத்திலிருந்து தொழில்துறை சமூகமாக மாறியதுடன் குறைந்தது, ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேவைத் துறையின் வளர்ச்சியுடன் அதிகரிக்கத் தொடங்கியது. வீடு மற்றும் குடும்பத்திற்கான பெண்களின் பொறுப்புகள் தொடர்பான கட்டமைப்பு மாற்றம் மற்றும் வளரும் சமூக விதிமுறைகளின் விளைவாக கோல்டின் இந்த முறையை விளக்கினார்.

இருபதாம் நூற்றாண்டின் காலகட்டத்தில், பெண்களின் கல்வி நிலைகள் தொடர்ந்து அதிகரித்தன, மேலும் பெரும்பாலான உயர் வருமான நாடுகளில் அவர்கள் இப்போது ஆண்களை விட கணிசமாக உயர்ந்துள்ளனர். தொழில் திட்டமிடலுக்கான புதிய வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இந்த புரட்சிகர மாற்றத்தை விரைவுபடுத்துவதில் கருத்தடை மாத்திரைக்கான அணுகல் முக்கிய பங்கு வகித்தது என்பதை கோல்டின் நிரூபித்தார். இருபதாம் நூற்றாண்டில் நவீனமயமாக்கல், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களின் விகிதாச்சாரங்கள் அதிகரித்த போதிலும், நீண்ட காலமாக பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான வருவாய் இடைவெளி நிரப்பப்படவில்லை. கோல்டினின் கூற்றுப்படி, விளக்கம் பின்வருமாறு தரப்பட்டுள்ளது. அதாவது, வாழ்நாள் முழுவதும் தொழில் வாய்ப்புகளை பாதிக்கும் கல்வி முடிவுகள் ஒப்பீட்டளவில் இளம் வயதிலேயே எடுக்கப்படுகின்றன. இளம் பெண்களின் எதிர்பார்ப்புகள் முந்தைய தலைமுறையினரின் (உதாரணமாக, குழந்தைகள் வளரும் வரை வேலைக்குச் செல்லாத அவர்களின் தாய்மார்கள்) அனுபவங்களால் உருவாக்கப்படும் நேர்வில் அவர்களின் வளர்ச்சி மெதுவாக இருக்கும்.

வரலாற்று ரீதியாக, வருவாயில் உள்ள பாலின இடைவெளியின் பெரும்பகுதி கல்வி மற்றும் தொழில் தேர்வுகளில் உள்ள வேறுபாடுகளால் விளக்கப்படலாம். இருப்பினும், கோல்டின் இந்த வருவாய் வேறுபாட்டின் பெரும்பகுதி இப்போது அதே தொழிலில் உள்ள பெண்களுக்குள் காணப்படுகிறதென்றும், இந்த வேறுபாடு பெரும்பாலும் முதல் குழந்தையின் பிறப்புடன் எழுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2023". October 9, 2023. https://www.nobelprize.org/prizes/economic-sciences/2023/summary/. 
  2. Johnson, Simon; Ahlander, Johan (October 9, 2023). "Nobel economics prize goes to Claudia Goldin".
  3. "The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2023", NobelPrize.org, பார்க்கப்பட்ட நாள் 2023-10-09

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாடியா_கோல்டின்&oldid=3809468" இலிருந்து மீள்விக்கப்பட்டது