கிளாட் சிமோன்
கிளாட் சிமோன் (Claude Simon, அக்டோபர் 10, 1913 – சூலை 6, 2005) ஒரு பிரெஞ்சு நாவலாசிரியராவார். 1985-ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசைப் பெற்றவர். மடகாசுகாரிலுள்ள அன்டனநரிவோவில் பிறந்தார். பிரான்சின் பாரிசு நகரில் காலமானார்.[1][2][3]
கிளாட் சிமோன் Claude Simon | |
---|---|
1985 இல் சிமோன் | |
பிறப்பு | அண்டனனரீவோ, மடகாஸ்கர் | 10 அக்டோபர் 1913
இறப்பு | 6 சூலை 2005 பாரிசு, பிரான்சு | (அகவை 91)
தொழில் | புதின எழுத்தாளர் |
தேசியம் | பிரெஞ்சு |
குறிப்பிடத்தக்க விருதுகள் | இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1985 |
இவரது பெற்றோர் பிரெஞ்சுக்காரர்களாவர். இவரது தந்தை முதல் உலகப் போரில் காலமானார். பெர்பிக்னன் (ரோசிலான் மாகாணத்தின் மத்தியிலுள்ளது) எனுமிடத்தில் இவர் தனது தாயார் மற்றும் குடும்பத்தினரோடு வளர்ந்தார். இவரது முன்னோர் ஒருவர் பிரெஞ்சுப் புரட்சியின் போது படைத்தளபதியாய் இருந்திருக்கிறார்.
காலேஜ் ஸ்டானிஸ்லாஸில் தனது பள்ளிப்படிப்பை முடித்த இவர் சிறிது காலம் ஆக்சுபோர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய இடங்களில் பயின்றிருக்கிறார். பின்னர் ஆன்றே லோடே அகாதமியில் ஓவியத்தை எடுத்து படித்திருக்கிறார். அதன் பின்னர் ஸ்பெயின், ஜெர்மனி, சோவியத் யூனியன், கிரீஸ் ஆகிய இடங்களில் அதிக அளவிலான பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். இப்பயண அனுபவமும் இரண்டாம் உலகப் போர் அனுபவங்களும் அவரது இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன. இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் மியூஸ் சண்டையில் (1940) பங்கெடுத்து போர்க்கைதியானார். ஒருவாறாக அங்கிருந்து தப்பி போரெதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்தார். அப்போது இவர் தனது முதல் புதினமான 'லெ டிரெச்சர்'('துரோகி', 1946-ல் பதிப்பிக்கப்பட்டது)-யை எழுதி முடித்தார். இப்புதினத்தை அவர் போருக்கு முன்னரே எழுதத் தொடங்கியிருந்தார்.
1961-ஆம் ஆண்டு 'ல ரௌட் டெ ஃபிளான்றே'-வுக்காக 'ல எக்சுபிரசு' பரிசைப் பெற்றார். 1967-ல் 'ஹிஸ்டொயர்'-க்காக மெடிசிஸ் பரிசைப் பெற்றார். 1973-ல் கிழக்கு ஆங்லியா பல்கலைக்கழகம் மதிப்புறு பேராசிரியராக்கி சிறப்பித்தது.
வெளி இணைப்புகள்
தொகு- About Claude Simon
- Association des Lecteurs de Claude Simon (ALCS) website for readers of Claude Simon (articles in french and in english)
- Claude Simon in the Nobel Institution website பரணிடப்பட்டது 2009-01-08 at the வந்தவழி இயந்திரம்
- Petri Liukkonen. "Claude Simon". Books and Writers (kirjasto.sci.fi). Archived from the original on 4 July 2013.
- Alexandra Eyle (Spring 1992). "Claude Simon, The Art of Fiction No. 128". The Paris Review. http://www.theparisreview.org/interviews/2096/the-art-of-fiction-no-128-claude-simon.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Claude Simon". authorscalendar.info. பார்க்கப்பட்ட நாள் 2024-02-04.
- ↑ Entre tradition et modernité (1967–1980). ccic-cerisy.asso.fr
- ↑ "Cerisy, le Centre Culturel International". www.ccic-cerisy.asso.fr. பார்க்கப்பட்ட நாள் 2024-02-04.