கிளாண்டிரானா
கிளாண்டிரானா | |
---|---|
கிளாண்டிரானா உருகோசா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | முதுகுநாணி
|
வகுப்பு: | நீர்நில வாழ்வன
|
வரிசை: | |
குடும்பம்: | இரணிடே
|
பேரினம்: | கிளாண்டிரானா
|
மாதிரி இனம் | |
இராணா மினிமா | |
வேறு பெயர்கள் | |
இரகோசா பெய், யே & குவாங், 1990 |
கிளாண்டிரானா என்பது கிழக்காசியாவில் (கிழக்கு சீனா, கொரியா, சப்பான் மற்றும் உருசிய தூர கிழக்கில் பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு) காணப்படும் உண்மையான தவளைகளின் (குடும்பம் இரனிடே) பேரினமாகும்.[1] இதன் பெயருக்கு 'சுரப்பித் தவளை' என்று பொருள் ஆகும்.[2]
கிளாண்டிரானா என்பது இராணாவிலிருந்து தோன்றிய பேரினமாகும். சமீபத்தில் விவரிக்கப்பட்ட கிளாண்டிரானா சுசுரா தவிர அனைத்து சிற்றினங்களும், முதலில் இரானா பேரினத்தில் சேர்க்கப்பட்டன. இவற்றில் சில உருகோசா பேரினத்தில் வைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது கிளாண்டிரானாவுடன் ஒத்ததாக உள்ளன. இதன் ஒற்றைத்தொகுதிமரபு உயிரினத் தோற்றம் கேள்விக்குள்ளாக்கப்பட்ட போதிலும் சமீபத்திய மூலக்கூறு ஆய்வுகள் இதனை ஆதரிக்கின்றது. கிளாண்டிரானா ஹைலரானாவின் சகோதர வகைப்பாட்டியல் பிரிவு எனத் தெரிகிறது.[1]
இந்த நேரத்தில், பின்வரும் சிற்றினங்கள் இந்தப் பேரினத்தில் சேர்க்கப்பட்டுள்ளன:[1]
- கிளண்டிரானா எமெல்ஜனோவி (நிகோல்சுகி, 1913)
- கிளாண்டிரானா மினிமா (திங் மற்றும் திசாய், 1979)
- கிளாண்டிரானா உருகோசா (தெம்மினிக் மற்றும் சுக்லெகல், 1838)
- கிளாண்டிரானா சுசுரா (செகியா, மியுரா மற்றும் ஒகடா, 2012)
- கிளாண்டிரானா டைண்டாயின்சிசு (சாங், 1933)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Frost, Darrel R. (2013).
- ↑ Dodd, C. Kenneth (2013). Frogs of the United States and Canada. Vol. 1. The Johns Hopkins University Press. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0633-6.