ஒற்றைத்தொகுதிமரபு உயிரினத் தோற்றம்
வழக்கமாக விலங்கினப் பகுப்பாய்வில், ஒற்றைத்தொகுதிக் குழு (monophyly) என்பது கிளைப்பாட்டியலை உருவாக்கும் ஒரு வகையன் (taxon, உயிரிகளின் குழு) ஆகும். இதன் பொருள் இதற்கு ஒரு மூதாதை சிறப்பினம் உண்டு; மேலும் இதற்கு பல வழித் தோன்றல்களும் உண்டு என்பதாகும். இது தற்போது வழக்கற்ற முழுமைத் தொகுதி என்ற சொல்லின் இணைச்சொல்லாகும். ஒற்றைத்தொகுதிக் குழுக்கள் ஒத்தக் கொணர்வுப் பான்மைகளைப் பகிர்கின்றன. அதாவது இவை நிகருருவங்கள் உடையனவாகும்.
ஒற்றைத்தொகுதி மரபு இணைதொகுதி மரபு, பலதொகுதி மரபு ஆகியவற்றுடன் வேறுபடுத்திப் பார்க்கப்படுகிறது. பின்னவற்றை இக்கட்டுரையின் இரண்டாம் விளக்கப் படத்தில் இருந்து மிக எளிதாகப் புரிந்துகொள்ளலாம். நடப்புப் புரிவின்படி, ஓர் இணைதொகுதிமரபுக் குழுவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒற்றைத்தொகுதிமரபுக் குழுக்கள் தவிர்த்த பொது மூதாதையிலிருந்து தோன்றிய அனைத்து வழித்தோன்றல்களும் உள்ளடங்கும். எனவே இது ஒற்றைத்தொகுதிமரபுக் குழுவிற்கு மிக நெருக்கமானது அல்லது இணையானதாகும். பலதொகுதி மரபுக் குழு ஒருங்கும் கூறுபாடுகளை அல்லது நடத்தைகளைக் கொண்டிருக்கும். (எ.கா., இரவில் இயங்கும் பாலூட்டிகள், மரங்கள், நீர்ப்பூச்சிகள்); மற்றவற்றில் இருந்து இவற்றை வேறுபடுத்தும் கூறுபாடுகள் எதுவும் பொது மூதாதையிடம் இருந்து பெறப்படுவதில்லை.
இந்த வரையறைகள் ஏற்கப்படவே பலகாலம் தேவைப்பட்டது. கவைபிரிவினச் சிந்தனை ஓங்கலாக நிலவிய 1960களில், பல மாற்று வரையறைகள் வழக்கில் இருந்தன. உண்மையில் வகைப்பாட்டாளர்கள் சில நேரங்களில் புதிய சொற்களை வரையறுக்காமலே பயன்படுத்தினர். இதனால் தொடக்க கால படிமலர்ச்சி இலக்கியத்தில் மிகுந்த குழப்பம் இருந்தது.[1] அந்தக் குழப்பம் இன்றும்கூட தொடர்கிறது.
வரையறைகள்
தொகுபரந்துபட்ட பொருளில் வரையறைகள் இருவகைப்படுகின்றன.
- வில்லி என்னிங் (1966:148) என்பார் ஒற்றைதொகுதிமரபுக் குழுக்களை நிகருருவக் குழுக்களாகவும் இணைத்தொகுதிமரபுக் குழுக்களை அண்நிகருருக் குழுக்களாகவும் பலதொகுதிமரபுக் குழுக்களை ஒருங்கு படிமலர்ச்சியாலும் வரையறுத்தார். சில ஆசிரியர்கள் ஒற்றைதொகுதிமரபுக் குழுக்களில் இணைத்தொகுதிமரபுக் குழுக்களையும் உள்ளடக்கி அவற்றை ஒரே பொது மூதாதையைப் பகிரும் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட குழுக்களாக வரையறுக்கின்றனர்.[2][3][4] என்றாலும், மேலுள்ள வரையறையின்படி, விரிவான வரையறை ஒற்றைதொகுதிமரபுக் குழுக்களையும் இணைத்தொகுதிமரபுக் குழுக்களையும் உள்ளடக்குகிறது. எனவே பெரும்பாலான அறிவியலார் ஒற்றைதொகுதிமரபுக் குழுக்களை ஒரு பொது கருதுகோள் மூதாதையில் இருந்து தோன்றிய அனைத்து வழித்தோன்றல்களையும் குறிப்பதாகச் சுருக்கிவிடுகின்றனர்.[1] என்றாலும் பேரினம், சிறப்பினம் போன்ற வகைபாட்டுக் குழுக்களைக் கருதும்போது, அவற்றின் பொது மூதாதையின் தோராயத் தன்மை தெளிவுபடுவதில்லை. பாலுறவு கொள்ளும் சிறப்பினங்களைப் பொறுத்தவரை, ஒரு தனி உறுப்பின்னாகவோ பாலுறவுகொள்ளும் இணையாகவோ பொது மூதாதையைக் கருதுவது நடப்புக்குப் பொருந்துவதாக இல்லை. ஏனெனில் இவை இயல்பாகவே ஊடினப்பெருக்கக் குழுமல்/திரள்களாகும்..[5]
- ஒற்றைதொகுதிமரபுக் குழுவும் பிற அதைச் சார்ந்த சொற்களும் வகையன்களின் விவாதங்களுக்கு மட்டும் பயன்படுத்தலாமே ஒழிய, வில்லி என்னிங் கூறும் கால்வழித்தோன்றல்களை விளக்கப் போதுமானவை அல்ல. மேலும் ‘ஓர் இனமும் அதன் அனைத்து வழித்தோன்றல்களும்’ என்ற வரையறை, பேரினத்தை வரையறுக்க உதவுவதில்ல எனச் சிலர் வாதிடுகின்றனர்.[5] டி.எம். சுட்டாமோசின் கூற்றின்படி, பேரினத்தையோ சிறப்பினத்தையோ கவைபிரிவு வரையறையால் நிறைவாக விளக்கமுடியாது. ஏனெனில், பல பேரினங்களும் சிறப்பினங்களும் கூட மலர்தலால் (budding) நிலவும் சிறப்பினத்தை ஒன்றுகூடிக் கட்டமைத்திருக்களாம். எனவே மூதாதையினம் இணைதொகுதிமரபாலோ கலப்புச் சிறப்பின உருவாக்கத்தாலோ கூட உருவாகியிருக்கலாம்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Hennig, Willi; Davis, D. (Translator); Zangerl, R. (Translator) (1999) [1966]. Phylogenetic Systematics (Illinois Reissue ed.). Board of Trustees of the University of Illinois. pp. 72–77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-252-06814-9.
{{cite book}}
:|first2=
has generic name (help) - ↑ Colless, Donald H. (மார்ச் 1972). "Monophyly". Systematic Zoology (Society of Systematic Biologists) 21 (1): 126–128. doi:10.2307/2412266
- ↑ Envall, Mats (2008). "On the difference between mono-, holo-, and paraphyletic groups: a consistent distinction of process and pattern". Biological Journal of the Linnean Society 94: 217. doi:10.1111/j.1095-8312.2008.00984.x.
- ↑ Ashlock, Peter D. (March 1971). "Monophyly and Associated Terms". Systematic Zoology (Society of Systematic Biologists) 20 (1): 63–69. doi:10.2307/2412223.
- ↑ 5.0 5.1 Simpson, George (1961). Principles of Animal Taxonomy. New York: Columbia University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-231-02427-4.
- ↑ Stamos, D.N. (2003). The species problem : biological species, ontology, and the metaphysics of biology. Lanham, Md. [u.a.]: Lexington Books. pp. 261–268. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0739105035.
வெளி இணைப்புகள்
தொகு- Abbey, Darren (1994–2006). "Graphical explanation of basic phylogenetic terms". University of California, Berkeley. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2010.
- Carr, Steven M. (2002). "Concepts of monophyly, polyphyly & paraphyly". Memorial University. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2010.
- Hyvönen, Jaako (2005). "Monophyly, consensus, compromise" (pdf). University of Helsinki. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2010.