பலதொகுதிமரபு உயிரினத் தோற்றம்

பலதொகுதிமரபு (polyphyly) (கிரேக்கத்தில் "பல்லினத்தின்" எனப் பொருள்) சார்ந்த குழு, ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட ஒற்றைப் பண்பகவகைகளின்: மரபுவகைகளின் ஒருங்கு படிமலர்ச்சியால் ஏற்பட்ட பான்மைகளைக் கொண்டுள்ளது. இந்நிலை அவற்றின் ஒருங்குதலாலோ அல்லது அவற்றில் ஒன்றின் மீள்திரும்புதலாலோ ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவை ஒரு பொதுமூதாதையில் இருந்து உருவாவதில்லை. மாற்றாக, பலதொகுதிமரபின ஒருங்குதல் நிகழ்வு எப்படி நிகழ்ந்திருந்தாலும் பன்மூதாதையர்வழித் தோன்றியதையே அது குறிக்கிறது.

Cladogram of the முதனிs, showing a ஒற்றைத்தொகுதிமரபு உயிரினத் தோற்றம் (the simians, in yellow), a paraphyly (the prosimians, in blue, including the red patch), and a polyphyly (the night-active primates, the lorises and the tarsiers, in red).

எடுத்துக்காட்டாக வெங்குருதி விலங்குகளின் குழு பலதொகுதி மரபினதாகும். ஏனென்றால் இவை பறவைகள், பாலூட்டிகள் ஆகிய இரண்டு தொகுதிகளின் பான்மைகளையும் கொண்டுள்ளன. ஆனால் அண்மையில் இவற்றின் பொது மூதாதை குளிர்குருதி இனமாக இனங்காணப் பட்டுள்ளது.[1] பறவைகள், பாலூட்டிகளின் மூதாதைகளில் வெங்குருதி இயல்பு தனித்தனியாக படிமலர்ந்துள்ளது. பலதொகுதிமரபினத்துக்கான அடுத்த எடுத்துகாட்டு முதலுயிரிகளும் பூஞ்சைகளும் ஆகும்.

உயிரியலார் பலர் சிறப்பினங்களைக் குழுவாக்குவதில் ஈரினங்களின் ஒருங்குபான்மைகளை ஏற்பதில்லை.பெரும்பாலும் அவர்களின் இலக்கு பலதொகுதிமரபினங்களைத் தவிர்ப்பதற்கே முனைகிறது. இது வகைபாட்டுத் திட்டங்களின் பேரளவுத் திருத்தங்களுக்கு வழிவகுக்கிறது.

வகைபாட்டைவிட சூழலியலை முதன்மையாக்க் கருதும் ஆய்வாளர்கள் பலதொகுதிமரபுக் குழுக்களை சரியானக் கருப்பொருளாக ஏற்கின்றனர். எனவே அவர்கள் ஆல்டெர்நாரியா என்ற பூஞ்சையினத்தின் ஒருங்குபான்மைகளைக் கருத்தில் கொண்டு அதை பலதொகுதிமரபினமாக ஏற்பதோடு பேரினமாகவும் வகைப்படுத்துகின்றனர்.[2]

ஒற்றைத்தொகுதிமரபு உயிரினத் தோற்றத்தைக் காட்டும் முதனிகளின் Cladogram, (the simians, in yellow), a paraphyly (the prosimians, in blue, including the red patch), and a polyphyly (the night-active primates, the lorises and the tarsiers, in red).

வழக்கமாக பலதொகுதிமரபுவழி தவிர்க்கப்படுகிறது தொகு

பல வகைபாட்டியல் சிந்தனைப் பள்ளிகளின் வகைபாடுகளில் அவர்கள் பலதொகுதிமரபினக் குழுக்கள் நிலவுதலை ஏற்காமல் தவிர்க்கின்றனர். ஒற்றைத்தொகுதி மரபினக் குழுக்களையே, அதாவது விரிபடிமலர்ச்சியால் உருவாகிய கால்வழி யினங்களை (clads) மட்டுமே உயிரினங்களின் குழுவாக்கத்தில் முதன்மையான குழுக்களாக ஏற்கின்றனர்.

ஏற்கெனவே அறிமுகப்படுத்திய கால்வழியினத்துடன் ஒப்பிடாமலே இவ்வழியில் சில கால்வழியினங்களை தொகுதிமரபியல் சொற்களால் வரையறுத்தல் எளிதாக அமைதலே இந்த எண்ணப் போக்கிற்கு காரணம் எனலாம். கணுசர்ந்த கால்வழியின் வரையறை, எடுத்துகாட்டாக, முந்தைய X, Y சிறப்பின்ங்களின் அனைத்துக் கால்வழிகளும் என அமையலாம். மாற்றாக பலதொகுதிமரபினக் குழுக்கள் பல கால்வழியினங்களால் வரையறுகப்படுகிறது. எடுத்துகாட்டாக "பறக்கும் முதுகெகும்பிகள் வவ்வால்,பறவை, டெரோசார் ஆகிய இன்ங்களைக் கொண்டுள்ளது எனலாம். ஏனெனில் இவை பல கால்வழியினங்களின் கூட்டாகவே வரையறுக்கப்படுகிறது. சிலர் இவற்றை ஒற்றைத்தொகுதி மரபினங்களைப் போல, அதாவது கால்வழியினங்களைப் போல, அவ்வளவு அடிப்படையானதல்ல எனக் கருதுகின்றனர்.

பலதொகுதிமரபினத்தைவிட ஓரினத் தொகுதிவகையை சார்ந்த முற்கணிப்பு எளிதானது என்பதே பின்னதை ஏற்பதற்கு வலிய காரணமாகலாம். எடுத்துகாட்டாக,ஓரினதொகுதிவகைப் புல்லான போசியேவின்]] கண்டுபிடிப்பு இக்குடும்ப மூதாதையில் இருந்து அதனால் புதிதாக உருவாகக் கூடிய புற்களின் கட்டமைப்பு, வளர்ச்சி, இனப்பெருக்கப் பான்மைகள் போன்றவற்றை முற்கணிக்க முடிகிறது. மாறாக, பலதொகுதிமரபின வகுப்பான டியாண்டிரியா வகுப்புக்கு (இ)லின்னேயசு இரு (stamens) வைத்து அடையாளப்படுத்தியது நடைமுறைக்குப் பொருந்தினாலும் முற்கணிப்புக்கு அது உதவாது. ஏனெனில் பல குழுக்களில் ஒருங்கல் படிமலர்வால் அதே இரு stamens உருவாகின்றன.[3] கோட்பாட்டைச் செய்முறைகளால் நிறுவும் அறிவியல் புலங்களில் முற்கணிப்பு வெற்றி மிக இன்றியமையாத தேவையாகும்.

பலதொகுதிமரபுச் சிறப்பினங்கள் தொகு

வகைபாட்டின் அடிப்படை அலகாகவும் இயற்கையில் காணக்கூடிய பான்மையாகவும் சிறப்பினத்துக்குத் (species) தனி இடமும் பாத்திரமும் உண்டு.[4] சிறப்பினங்கள் இயல்பாக ஒற்றைத் தொகுதிமரபின (அல்லது குறைந்தநிலையில் இணைதொகுதி மரபின) என வழக்கமாகக் கருதப்படுகின்றன.என்றாலும் கலப்புச் சிறப்பினவாக்கம் பலதொகுதி மரபினவற்றை உருவாக்குகின்றன.[5] இயற்கையில் கலப்புச் சிறப்பினங்கள் பொது நிகழ்வாக உள்ளன. குறிப்பாக நிலைத்திணைகளில் (மரஞ்செடிகொடிகளில்) பலபண்பகச் சேர்க்கையால் (polyploidy) வேகமாகச் சிறப்பினங்கள் உருவாகின்றன.[6]

மேலும் பார்க்க தொகு

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. Ernst Mayor, What evolution is,Phoenix, 2002,pp.249.
  2. Aschehoug, Erik T.; Metlen, Kerry L.; Callaway, Ragan M.; Newcombe, George (2012). "Fungal endophytes directly increase the competitive effects of an invasive forb". Ecology 93 (1): 3–8. doi:10.1890/11-1347.1. http://plantecology.dbs.umt.edu/plantecology/People/documents/Aschehougetal.2012ENDOPHYTEINVASIONCOMPETITION.pdf. பார்த்த நாள்: July 8, 2013. 
  3. Stace, Clive A. (2010). "Classification by molecules: What’s in it for field botanists?". Watsonia 28: 103–122. http://www.archive.bsbi.org.uk/Wats28p103.pdf. பார்த்த நாள்: July 31, 2013. 
  4. Queiroz, Kevin; Donoghue, Michael J. (December 1988). "Phylogenetic Systematics and the Species Problem". Cladistics 4 (4): 317–338. doi:10.1111/j.1096-0031.1988.tb00518.x. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1096-0031.1988.tb00518.x/abstract. பார்த்த நாள்: 21 January 2015. 
  5. Hörandl, E.; Stuessy, T.F. (2010). "Paraphyletic groups as natural units of biological classification". Taxon 59 (6): 1641–1653. 
  6. Linder, C.R.; Risenberg, L.H. (22 June 2004). "Reconstructing patterns of reticulate evolution in plants". American Journal of Botany 91 (10): 1700–1708. doi:10.3732/ajb.91.10.1700. http://www.amjbot.org/content/91/10/1700.full. பார்த்த நாள்: 14 December 2011.