கிளாமங்கலம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கிளாமங்கலம் கிராமம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள கிராமம். 2001 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி கிளாமங்கலத்தின் மொத்த மக்கள் தொகை 2372 பேர், 1140 ஆண்களும் 1232 பெண்களும் உள்ளனர்[சான்று தேவை].
தெருக்கள்
தொகுகிளாமங்கலம் கிராமம் கீழ்க்காணூம் தெருக்களை உள்ளடக்கியது,
- நடுத் தெரு
- தெற்குத் தெரு
- வடக்குத் தெரு
- வேதநாயகிபுரம்
- கானன்கொல்லை
- மேடையகொல்லை
- குஞ்சான் தெரு
கோவில்கள்
தொகுகிளாமங்கலம் கிராமம் தெற்குத் தெருவில் உள்ள குருந்தையனார் கோவில் பிரசித்தி பெற்றது. அக்கோவிலில் ஐய்யனார், வீரனார், கருப்பு சாமி, முனி, காளி போன்ற தெய்வங்கள் உள்ளன.
கிளாமங்கலம் கிராமம் வடக்குத் தெருவில் உள்ள ஆக்கமுடைய ஐயனார் கோவில் பிரசித்தி பெற்றது, அக்கோவிலில் ஐய்யனார், வீரனார், கருப்பு சாமி,செம்முனி, காளி போன்ற தெய்வங்கள் உள்ளன.
குஞ்சான் தெருவில் அரங்கநாதர் ஸ்வாமி திருக்கோவில் உள்ளது
தொழில்
தொகுகிளாமங்கலம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமம். இங்கு நெல், தென்னை, கரும்பு, நிலக்கடலை முதலியவை பயிரிடப்படுகின்றன.
கல்விக் கூடங்கள்
தொகுஒரு அரசு உயர்நிலைப்பள்ளியும் மூன்று அரசு தொடக்கப்பள்ளிகளும் உள்ளன.