கிளென்

இந்திய வனப்பகுதி

கிளென் (Glen) என்பது இந்தியாவிலுள்ள ஒரு வனப்பகுதியாகும். வட இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லா நகரில் அன்னடேல், கோடை மலை, சௌரா மைதான் மற்றும் பொய்லுகஞ்சு பகுதிகளுக்கு இடையே இது அமைந்துள்ளது. இயற்கை காட்சிகள் மற்றும் இயற்கை பாதைகளுக்கு இப்பகுதி பெயர் பெற்றதாகும்.[1]

நுழைவாயில்

புவியியல் தொகு

சௌரா மைதானத்திற்கு கீழே அன்னாடேலுக்கு அடுத்ததாக கிளென் மலைப்பகுதி அமைந்துள்ளது. கிளென்னின் சில பகுதிகள் கோடை மலையின் புறநகர் பகுதிக்கு கீழே அமைந்துள்ளன.[2]

சுற்றுலா தொகு

கிளென் மலைப்பகுதி நிறைய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. மூன்று பாதைகள் மற்றும் ஒரு மேற்கட்டி மண்டபம் ஆகியவற்றை உள்ளடக்கிய இவ்வனப்பகுதியின் முக்கிய பாதைகளுக்கு கீழே ஒரு நீர்வீழ்ச்சியும் உள்ளது. வெண்கலப் பாதை, கிசிகிசுக்கும் பாதை, ஓடைப்பாதை என மூன்று இயற்கைப் பாதைகளுக்கும் பெயரிடப்பட்டு அவற்றை புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

சுற்றுலாப் பயணிகளின் அனுபவத்தை அறிவுடன் மேம்படுத்தும் விதமாக வழிகாட்டிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு கிளென் மலைகளின் தாவர மற்றும் விலங்கினங்கள் மற்றும் அரிய வகை தாவரங்கள் மற்றும் இமயமலை மரங்கள் பற்றி தெரிவிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. "Heritage walk to boost tourism in 'Queen of Hills'". The Statesman (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-04-16. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. IANS (2018-06-11). "Parched Shimla a tale of environmental degradation". Business Standard India. https://www.business-standard.com/article/news-ians/parched-shimla-a-tale-of-environmental-degradation-118061100629_1.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளென்&oldid=3644328" இலிருந்து மீள்விக்கப்பட்டது