கோடை மலை, சிம்லா

கோடை மலை (Summer Hill) கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,123 மீட்டர் உயரத்தில் இமாச்சலப்பிரதேசத்தின் மாநில தலைநகரான சிம்லாவின் தொலைதூர புறநகர்ப் பகுதியாகும்.[1] இது சிம்லா ரிட்ஜுக்கு 5 கிலோமீட்டர் தொலைவில் மேற்கே ஏழு மலைகளின் தொகுப்பில் ஒன்றாக அமைந்துள்ளது. [2]

கோடை மலை
நகரம்
கோடை மலை தொடருந்து நிலையம், சிம்லா இந்தியா

வரலாறு

தொகு

கடந்த காலங்களில், மகாத்மா காந்தி சிம்லா வருகையின் போது கோடை மலையில் உள்ள ராஜ்குமாரி அம்ரித் கவுரின் [3] ஜார்ஜிய மாளிகையில் தங்கியிருந்தார்.[4] பாட்டர்ஸ் ஹில் என்றும் அழைக்கப்படும் இப்பகுதியில் பைன் மற்றும் தேவதாரு மரங்கள் நிறைந்த சரிவுகளில் அழகிய குடியிருப்புகள் பல உள்ளன. இது பிரபல ஓவியர் அம்ரிதா சேர்கிலின் (1913-1941) குடும்பத்தைச் சார்ந்தது.[5]

இன்று

தொகு

இந்த இடம் பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது. 1884-88 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட முன்னாள் வைஸ்ராய்கள் தங்குமிடத்தில் இந்திய மேம்பாட்டு ஆய்வு நிறுவனம் (1965ஆம் ஆண்டு நிறுவப்பட்டது), [1] அமைந்துள்ளது. இது அருகிலுள்ள கண்காணிப்பு மலையில் உள்ளது. [6]

இன்று, இங்கு இமாச்சலப் பிரதேசப் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு முக்கியமாகக் கலை, வர்த்தகம், அறிவியல், மேலாண்மை, சட்டம் மற்றும் மொழிகளில் முதுகலை பாடங்கள் நடத்தப்படுகின்றன. இப்பல்கலைக்கழகமானது 1975இல் தொடங்கப்பட்டது. கோடை மலை கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதையில் அமைந்திருந்தாலும், பெரும்பாலான மாணவர்கள் வளாகத்திலிருந்து சிம்லாவிற்கு நடந்தே செல்கின்றனர். [4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Famous Places around Shimla". Archived from the original on 2016-03-29. பார்க்கப்பட்ட நாள் 2021-01-01.
  2. "Seven Hill Attractions". Archived from the original on 2020-02-18. பார்க்கப்பட்ட நாள் 2021-01-01.
  3. Summer Hill at mapsofindia.com
  4. 4.0 4.1 "Places of Interest, Shimla at hpuniversity". Archived from the original on 2011-07-19. பார்க்கப்பட்ட நாள் 2021-01-01.
  5. "Amrita Shergil Biography atsikh-heritage". Archived from the original on 2020-02-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-01.
  6. IIAS History
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடை_மலை,_சிம்லா&oldid=3717446" இலிருந்து மீள்விக்கப்பட்டது