கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதை

கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதை (Kalka–Shimla Railway) 2 அடி (762 மிமீ) அங்குலம் அளவுள்ள குற்றகலப் பாதையாகும். இது மலைவழித் தொடர்வண்டிப்பாதையாகும். கால்கா எனும் இடத்திலிருந்து 96 கிலோமீட்டர் தொலைவுள்ள சிம்லா எனும் நகருக்குச் செல்கிறது. இயற்கைக் காட்சிகளை உள்ளடக்கியது இது செல்லும் வழி.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
கால்கா - சிம்லா தொடர்வண்டி
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
டாராதேவி நிலையத்தில் ஷிவாலிக் டீலக்ஸ் விரைவு வண்டி
வகைகலாச்சாரம்
ஒப்பளவுii, iv
உசாத்துணை944
UNESCO regionAsia-Pacific
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1999 (23rd தொடர்)
விரிவாக்கம்2005; 2008

வரலாறு

தொகு

சிம்லாவானது கடல்மட்டத்திலிருந்து 7116 அடி (2169மீ) உயரத்தில் அமைந்துள்ள நகரம். 1830 -ல் சிம்லா ஆங்கிலேயரின் முக்கிய இடமாக மாறியிருந்தது. 1864-ல் இது ஆங்கிலேயர்களின் கோடை வாழிடமாக இருந்தது. மலைப்பகுதியின் பிற கிராமங்களோடு தொடர்புகொள்ளவே இத் தொடர்வண்டிப்பாதை அமைக்கப்பட்டது. 1903 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தியதி, 96.54 கிலோமீட்டர் தூரமுள்ள இத்தொடர்வண்டிப்பாதை அதிகாரபூர்வமாகப் போக்குவரத்துக்கு தொடங்கப்பட்டது.

ஆவணப்படம்

தொகு

பிபிசி தொலைக்காட்சி இத்தொடர்வண்டியைப் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்தது. இத் தொடர்வண்டிப்பாதை யுனெஸ்கோ அமைப்பால் ஜூலை 8, 2008 இல் இந்தியாவிலுள்ள உலகப்பாரம்பரியம்மிக்க களங்களில் ஒன்றாக அறிவித்தது[1].

தொடர்வண்டிகள்

தொகு
  • ஷிவாலிக் டீலக்ஸ் விரைவு வண்டி 52451/52452 (Shivalik Deluxe Express)
  • கால்கா-சிம்லா விரைவு வண்டி 52453/52454 (Kalka Shimla Express)
  • இமய ராணி 52455/52456 (Himalayan Queen)
  • கால்கா-சிம்லா பயணிகள் வண்டி 52457/52458 (Kalka Shimla Passenger )

செல்லும் வழி

தொகு
கால்கா -சிம்லா தொடர்வண்டி
     
0 km கால்கா


     
6 km டாக்சா


     
11 km கும்மான்


     
17 km ஹோடி


     
27 km சன்வாரா


     
33 km தரம்பூர்


     
39 km குமர்ஹாட்டி


     
43 km பாரோக்


     
47 km சோலான்


     
53 km சோலோக்ரா


     
59 km கண்டகாட்


     
65 km கானோ


     
73 km காத்லிகாட்


     
78 km ஷோகி


     
85 km டாராதேவி


     
90 km ஜூடோக்


     
93 km சம்மர் ஹில்


     
96 km சிம்லா

மேற்கோள்கள்

தொகு