கிளைடு ஆறு
கிளைடு ஆறு (River Clyde, சுகாத்து: Watter o Clyde)இசுக்கொட்லாந்திலுள்ள ஓர் ஆறு ஆகும். ஐக்கிய இராச்சியத்தில் உள்ள நீளமான ஆறுகளில் ஒன்பதாகவும் இசுக்கொட்லாந்தில் மூன்றாவதாகவும் உள்ளது. இது கிளாஸ்கோ நகரத்தின் வழியாகச் செல்கிறது. பிரித்தானியப் பேரரசில் கப்பல் கட்டுவதற்கும் வணிகத்திற்கும் இது முதன்மையான ஆறாக விளங்கியது.
கிளைடு ஆறு | |
ஆறு | |
கிளாஸ்கோவின் புரூமிலாவில் செல்லும் கிளைடு ஆறு
| |
நாடு | இசுக்கொட்லாந்து |
---|---|
கவுன்ட்டிகள் | தெற்கு இலனார்க்சையர், அர்கில், ஐர்சையர் |
நகரங்கள் | இலனார்க்கு, கிளாசுக்கோ, போத்வெல், கிரீனோக்கு |
அடையாளச் சின்னங்கள் |
பால்சு ஆஃப் கிளைடு (அருவிகள்), போத்வெல் கோட்டை, கிளைடின் கழிமுகம் |
உற்பத்தியாகும் இடம் | தெற்கு இலனார்க்சையரிலுள்ள லோதர் குன்றுகள் |
- ஆள்கூறு | 55°24′23.8″N 3°39′8.9″W / 55.406611°N 3.652472°W |
கழிமுகம் | பிர்த் ஆஃப் கிளைடு |
- ஆள்கூறு | 55°40′46.3″N 4°58′16.7″W / 55.679528°N 4.971306°W |
நீளம் | 176 கிமீ (109 மைல்) |
வடிநிலம் | 4,000 கிமீ² (1,544 ச.மைல்) |
புதிய தொழிற்புரட்சி சார்ந்த காலத்தையும் தற்கால உலகையும் விவரிக்க விரும்பிய ஜான் அட்கின்சன் கிரிம்ஷா, ஜேம்ஸ் கே போன்ற கலைஞர்களுக்கு கிளைடு ஆறு ஓர் அகத்தூண்டலாக அமைந்தது.[1]
ஊடகம்
தொகு-
செயின்ட். ஆன்ட்ரூசு நடைப்பாலம்
-
பெல்சு பாலம்
-
மில்லினியம் பாலம்
-
தற்காலக் கட்டிடங்கள், கிளைடு கலையரங்கம், பின்னியெசுடன் பாரந்தூக்கி மற்றும் கிரௌன் பிளாசா தங்குவிடுதி
-
டம்பர்டனில் திறக்கும் கழிமுகம்
-
தாழ் அலைகளின் போது டம்பர்டனுக்கு அப்பால்
-
கிழக்குப்புறமாக கிளாசுக்கோவின் நகர மையம்
-
டிரேடெசுடன் பாலத்தின் தெற்குப்புறக் காட்சி
மேற்சான்றுகள்
தொகு- ↑ Macmillan, Duncan (1994). Scottish Art in the 20th Century. Edinburgh: Mainstream Publishing. pp. 31–32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85158-630-X.