கி. அய்யாறு வாண்டையார்

கி. அய்யாறு வாண்டையார் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திருவையாறு தொகுதியிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் இந்து அறநிலையத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[2]

2014 ஆம் ஆண்டின் பெருந்தலைவர் காமராசர் விருது பெற்றார்.[3]

மறைவுதொகு

உடல்நலக்குறை காரணமாக சிகிச்சைபெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சூலை 4, 2021 அன்று காலமானார்.[4]

மேற்கோள்கள்தொகு

  1. "Statistical Report on General Election 2001 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. 2010-10-06 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2020-07-15 அன்று பார்க்கப்பட்டது.
  2. முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் காலமானார். தினமணி. 4 சூலை 2021. https://www.dinamani.com/tamilnadu/2021/jul/04/former-minister-ayyaru-vaandayar-exprired-3653849.html. 
  3. "விருதுகள்". ஜெயா செய்திகள் (June 15, 2014)
  4. தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் உடல்நலக்குறைவால் காலமானார். தினகரன். 4 சூலை 2021. https://m.dinakaran.com/article/News_Detail/687773/. 

வெளி இணைப்புகள்தொகு