கி. கு. கிண்டே

இந்துஸ்தானிப் பாடகர்

கிருஷ்ணா குண்டோபந்த் கிண்டே, (கே.ஜி. கிண்டே) (K. G. Ginde) (26 திசம்பர் 1925 – 13 சூலை 1994) என்று அழைக்கப்படும் இவர் ஓர் இந்துஸ்தானி இசைப் பாடகரும் ஆசிரியரும் ஆவார். இவருடைய குரு எஸ்.என். ரத்தன்சங்கர் இவர் மேல் மிகப்பெரிய செல்வாக்கு செலுத்தினார்.

கிருஷ்ணா குண்டோபந்த் கிண்டே
பிற பெயர்கள்கே.ஜி. கிண்டே
பிறப்பு(1925-12-26)திசம்பர் 26, 1925
பிறப்பிடம்பைல்ஹோங்கல், பெல்காம் மாவட்டம், கருநாடகம், இந்தியா
இறப்பு13 சூலை 1994(1994-07-13) (அகவை 68)
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை, இசையியலாளர்
தொழில்(கள்)வாய்ப்பாட்டுக் கலைஞர்
இசைத்துறையில்1936–1994

சுயசரிதை தொகு

9 குழந்தைகளில் 8வது குழந்தையாக இருந்ததால், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களால் "சோட்டு" (சிறியவர்) என்று அழைக்கப்பட்ட கிண்டே, பெல்காமுக்கு அருகிலுள்ள பைல்ஹோங்கலில் திசம்பர் 26, 1925 இல் பிறந்தார். இவருக்கு 11 வயதாக இருந்தபோது, இவர் இலக்னோக்குச் சென்று, இசை அறிஞர் எஸ்.என். ரத்தன்சங்கரிடம் இசைப் பயிற்சியைத் தொடங்கினார். [1]

பாரதிய வித்யா பவனில் ஆசிரியராகப் பணிபுரிய 1951 இல் மும்பைக்குச் சென்றார். 1962ல் வல்லப சங்கீத் வித்யாலயாவின் முதல்வரானார்.

இவரது அறுபதாவது பிறந்தநாளில், பீம்சென் ஜோஷி, குமார் கந்தர்வன், , புருசோத்தம் லட்சுமண் தேசுபாண்டே உள்ளிட்ட இந்துஸ்தானி இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இறப்பு தொகு

சூலை 13, 1994 அன்று தனது 68 வயதில் கொல்கத்தாவில் மாரடைப்பால் இறந்தார்.

சான்றுகள் தொகு

  1. "Our Faculty:Pandit K G Ginde". ITC Sangeet Research Academy. Archived from the original on 26 June 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._கு._கிண்டே&oldid=3445466" இலிருந்து மீள்விக்கப்பட்டது