கி. பி. அரவிந்தன்

கி. பி. அரவிந்தன் (17 செப்டம்பர் 1953 - 8 மார்ச் 2015), ஈழத்தின் குறிப்பிடத்தக்க புலம்பெயர் எழுத்தாளரும், கவிஞரும், மூத்த அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். அத்துடன் ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டுள்ளார். அப்பால் தமிழ் எனும் இணையத் தளத்தினை நடத்தி வந்தார். புதினப்பலகை இணையத்தளத்தின் முக்கிய பங்காளர்.

கி. பி. அரவிந்தன்
பிறப்புகிறிஸ்தோபர் பிரான்சிஸ்
(1953-09-17)செப்டம்பர் 17, 1953
யாழ்ப்பாணம், இலங்கை
இறப்புமார்ச்சு 8, 2015(2015-03-08) (அகவை 61)
பாரிசு, பிரான்சு
இருப்பிடம்பாரிசு
அறியப்படுவதுஎழுத்தாளர், கவிஞர், அரசியல் செயற்பாட்டாளர்
பெற்றோர்பேதுறு கிறிஸ்தோப்பர், மாசிலாமணி
வாழ்க்கைத்
துணை
சுமத்திரி
பிள்ளைகள்அங்கதன், மானினி

அரவிந்தனின் இயற் பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிசு. நெடுந்தீவைச் சேர்ந்த பேதுறு கிறிஸ்தோப்பர், மாசிலாமணி ஆகியோருக்கு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார். 1972 ஆம் ஆண்டில் 1972 அரசமைப்புச் சட்டம் தமிழருக்கு ஏற்றதல்ல என்ற துண்டறிக்கை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதான மூன்று இளைஞர்களில் அரவிந்தனும் ஒருவர். 1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார். இவர் தோழர் சுந்தர் என்றும் ஈரோஸ் இயக்கத்தின் விடுதலைப் போராளியாக அறியப்பட்டவர். 1977 இல் இலங்கையை விட்டு வெளியேறி, புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வந்தார். இவரது படைப்புக்களில் ஈழவிடுதலைப் போராட்டமும், ஈழத்தமிழரின் புகலிட வாழ்வியலும் முனைப்புடன் காணப்படுகின்றன.

நூல்கள் தொகு

  • இனி ஒரு வைகறை (1991) - கவிதை - பொன்னி வெளியீடு
  • கனவின் மீதி (1999) - கவிதை - பொன்னி வெளியீடு
  • பாரிஸ் கதைகள் (2004) - சிறுகதை - அப்பால் தமிழ் வெளியீடு
  • முகம் கொள் (1992) - கவிதை - கீதாஞ்சலி வெளியீடு
  • மிச்சமென்ன சொல்லுங்கப்பா - ஒளி வெளியீடு

மறைவு தொகு

கி. பி. அரவிந்தன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பாரிசில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2015 மார்ச் 8 அன்று காலமானார்.[1] 1990 இல் இவருக்குத் திருமணமாகி மகன், மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. Ki Pi Aravinthan passes away in Paris, தமிழ்நெட், 8 மார்ச் 2015

வெளி இணைப்புக்கள் தொகு

தளத்தில்
கி. பி. அரவிந்தன் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._பி._அரவிந்தன்&oldid=3239867" இலிருந்து மீள்விக்கப்பட்டது