கி. வினோத் சந்திரன்

கிருஷ்ணன் வினோத் சந்திரன் (K. Vinod Chandran) என்பவர் இந்திய நீதிபதியும் தற்போதைய, பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் ஆவார்.[1][2][3][4] இவர் கேரள உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார்.

மாண்புமிகு
கி. வினோத் சந்திரன்
Krishnan Vinod Chandran
தலைமை நீதிபதி-[பாட்னா உயர் நீதிமன்றம்]]
பதவியில் உள்ளார்
பதவியில்
27 மார்ச்சு 2023
பரிந்துரைப்புதனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட்
நியமிப்புதிரௌபதி முர்மு
முன்னையவர்சஞ்சய் கரோல்
நீதிபதி, கேரள உயர் நீதிமன்றம்
பதவியில்
8 நவம்பர் 2011 – 26 மார்ச்சு 2023
பரிந்துரைப்புஎசு. எச். கபாதியா
நியமிப்புபிரதிபா பாட்டில்
முன்னையவர்எசு. எச். கபாதியா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 ஏப்ரல் 1963 (1963-04-25) (அகவை 60)
இந்தியா
முன்னாள் கல்லூரிகேரள சட்ட அகதாதமி
இணையத்தளம்High Court of Kerala

பணி தொகு

நீதிபதி வினோத் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சட்ட அகாதமியின் சட்டக் கல்லூரியில் சட்டத்தில் பட்டம் பெற்றார். பின்னர் 1991ஆம் ஆண்டு பரவூரில் தனது சட்டப் பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குரையாடினார். இவரது பயிற்சியின் போது இவர் 2007 முதல் 2011 வரை கேரள அரசின் சிறப்பு அரசு வழக்கறிஞராக (வரிகள்) பணியாற்றினார். இவர் 8 நவம்பர் 2011 அன்று கேரள உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு 24 சூன் 2013 அன்று நிரந்தர நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.[2][3] இவர் 29 மார்ச் 2023 அன்று பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1 ஆகத்து 2023 அன்று, பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே. வினோத் சந்திரன் மற்றும் நீதிபதி பார்த்த சாரதி ஆகியோர் அடங்கிய அமர்வில் பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது செல்லுபடியாகும் என்றும் இது சட்டப்பூர்வமானது என்று தீர்ப்பளித்தார்.[5] இந்த நீதி அமர்வு தனது 101 பக்க தீர்ப்பில்[6][7][8] இந்த உத்தரவை வழங்கியது. அதே நேரத்தில் கணக்கெடுப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.[9][10]

மேற்கோள்கள் தொகு

  1. "Official". hckerala.gov.in. பார்க்கப்பட்ட நாள் 12 Nov 2021.
  2. 2.0 2.1 "Four advocates appointed HC Judges". newindianexpress.com. 6 Nov 2011. பார்க்கப்பட்ட நாள் 12 Nov 2021.
  3. 3.0 3.1 "Four Additional Judges appointed to Kerala High Court". thehindubusinessline.com. 8 Nov 2011. பார்க்கப்பட்ட நாள் 12 Nov 2021.
  4. "4 Additional Judges Appointed to the Kerala High Court". babushahi.com. 8 Nov 2011. பார்க்கப்பட்ட நாள் 12 Nov 2021.
  5. "Patna high court holds caste survey in Bihar as valid and legal, dismisses all petitions challenging survey".
  6. "Why the Patna High Court upheld Bihar's caste survey".
  7. "IN THE HIGH COURT OF JUDICATURE AT PATNA" (PDF).
  8. "High Court's Green Signal To Bihar Caste Survey Challenged In Supreme Court".
  9. "HC upholds Bihar caste survey".
  10. "Patna HC upholds Bihar caste-based survey: Why it was challenged, what the court said".

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._வினோத்_சந்திரன்&oldid=3805559" இலிருந்து மீள்விக்கப்பட்டது