கீசாங் ஆறு
கீசாங் ஆறு (மலாய்: Sungai Kesang; ஆங்கிலம்: Kesang River) என்பது மலேசியாவின் ஜொகூர் மற்றும் மலாக்கா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள ஆறு. இதன் நீளம் 37 கி.மீ.
கீசாங் ஆறு Klang River Sungai Kesang | |
---|---|
பிளஸ் நெடுஞ்சாலையில் கீசாங் ஆற்றுப் பாலம். | |
அமைவு | |
நாடு | மலேசியா; |
மாநிலம் | மலாக்கா & ஜொகூர் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | லேடாங் மலை |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | மலாக்கா நீரிணை |
நீளம் | 37 km (23 mi) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | தங்காக் ஆறு |
கீசாங் ஆறு மலாக்கா நீரிணையில் கலக்கும் இடத்தில், தூண்டில் போட்டு மீன் பிடிப்பது அங்கு வாழும் மக்களின் வாடிக்கை நிகழ்ச்சியாகும். சில வேளைகளில் முதலைகள் பார்வையில் படுவதும் உண்டு.
அமைதியான மற்றும் தெளிவான சூழலில் காணப்படும் கீசாங் ஆற்றில் முதலைகள் உள்ளன. பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று மலாக்கா வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு (Perhilitan) பொதுமக்களை எச்சரித்து உள்ளது.[1]
ஆற்று வழித்தடம்
தொகுகீசாங் லாவுட் எனும் மீன்பிடி கிராமம் அண்மைய காலங்களில் பிரபலமான இடமாக மாறி வருகிறது. ஏனெனில் கீசாங் ஆறு, கடலில் கலக்கும் சதுப்பு நிலங்களில் வலசை போகும் பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன.[2]
கீசாங் ஆறு, லேடாங் மலையில் உற்பத்தியாகிறது. லேடாங் மலையில் இருந்து தங்காக் நகரை வந்து அடைந்ததும் இரண்டாகப் பிரிகிறது. ஒன்று லேடாங் மலையில் உற்பத்தியான அசல் கீசாங் நதி. மற்றொன்று தங்காக் கிளை நதியாக மாறுகிறது.[3]
கீசாங் ஆற்றுப் படுகையில் உள்ள இடங்கள்
தொகுகீசாங் ஆற்றின் வழியில் காணப்படும் கிராமங்கள் பெக்கோக், டோக், சாபாவ், அசகான், கெமே மற்றும் சோகோங்.
தங்காக் ஆற்றின் வழியில் காணப்படும் கிராமங்கள் சியாலாங், தங்காக், பெங்காலான் பெசார், செபராங் காஜா, பாயா மாஸ் மற்றும் சாகில்.
வரலாறு
தொகுகீசாங் ஆற்றின் வழியில் காணப்படும் ஒரு கிராமம் சோகோங். லேடாங் மலையின் அடிவாரத்தில் நிறைய தங்கம் உள்ளது என்ற செய்தியைக் கேள்விப்பட்டு சுமத்திரா, பாகார் ரூயோங் பத்து சங்கார் (Pagar Ruyung Batu Sangkar) எனும் கிராமத்தைச் சேர்ந்த மினாங்கபாவ் சமூகத்தைச் சேர்ந்தவர்களால், 1700-ஆம் ஆண்டு தொடக்கத்தில் சோகோங் கிராமம் திறக்கப்பட்டது.[3]
மினாங்கபாவ் மக்கள், கடல் அலைகள் கடல் புயல்களைத் தாண்டி ஒரு பெரிய பாய்மரப் படகின் மூலமாகக் கீசாங் ஆற்றில் பயணம் செய்து சோகோங் கிராமத்தை அடைந்தனர். கீசாங் ஆற்றின் இடது கரையில் ஒரு குடியேற்றத்தைத் திறந்தனர்.
மினாங்கபாவ் மக்கள்
தொகு
லேடாங் மலையின் அடிவாரத்தில் தங்கம் தேடுவதற்காக ஆண்கள் கீசாங் ஆற்றின் வழியாகச் செல்வார்கள். பெண்கள் குடும்ப வேலைகளைக் கவனித்துக் கொள்வார்கள்.
மினாங்கபாவ் சமூகத்தினரின் தனித்துவமான அடாட் பெர்பாத்தே (Adat Perpatih) பழக்க வழக்கங்களை, இப்போதும்கூட ஜாசின் மாவட்டத்தில் காண முடிகின்றது.[3]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Jabatan Perlindungan Hidupan Liar dan Taman Negara (Perhilitan) Melaka mengingatkan orang ramai supaya tidak menjadikan Sungai Kesang, yang tular dengan persekitaran tenang dan jernih, sebagai lokasi 'pesta' mandi-manda kerana dikhuatiri boleh mengancam nyawa mereka". www.astroawani.com. பார்க்கப்பட்ட நாள் 28 March 2022.
- ↑ "Pengkalan Nelayan Kesang Laut is also now a popular haunt as migratory birds are also flocking and resting at the mangroves surrounding the riverbank". பார்க்கப்பட்ட நாள் 28 March 2022.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 3.0 3.1 3.2 Bugisi, Jaafar Kelana Al. "SEJARAH SUNGAI KESANG DAN KAMPUNG SUNGAI RAMBAI". Keturunan Tok Kepau. பார்க்கப்பட்ட நாள் 28 March 2022.