கீதம்ரெட்டி வினோத் ரெட்டி

இந்திய அரசியல்வாதி

கீதம்ரெட்டி வினோத் ரெட்டி (Kethamreddy Vinod Reddy) ( 17 சூலை, 1982) ஓர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திராவின் இந்திய இளைஞர் காங்கிரசின் முன்னாள் மாநில பொதுச் செயலாளருமாவார்.[1] தற்போது, ஜனசேனா கட்சியின் நெல்லூர் நகரம் சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.[2] 2019 சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார்[3][4]

கீதம்ரெட்டி வினோத் ரெட்டி
பிறப்பு17 சூலை 1982 (1982-07-17) (அகவை 42)
நெல்லூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்சென்னைப் பல்கலைக்கழகம்
பணிஅரசியல்வாதி, வணிகர்
அரசியல் கட்சிஜனசேனாக் கட்சி
பிள்ளைகள்ஜனனி, மோக்‌ஷயா
வலைத்தளம்
www.vinodreddy.in

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

வினோத் ரெட்டி 1982 ஜூலை 17 அன்று நெல்லூர் நகரில் பிறந்தார். இவர் ஒரு அரசியல் பின்னணி குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. இவரது தந்தை வாசுதேவா ரெட்டி ஒரு காவலர்.[5] இவரது தாய் வாணி ஒரு இல்லத்தரசி. தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்த பின்னர், 2002 ஆம் ஆண்டில் "இன்வென்டிங் ஏட்ஸ்" [6] என்ற பெயரில் தனது சொந்த தொழிலைத் தொடங்கினார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

2003-2005 காலப்பகுதியில், வினோத் ரெட்டி, கூடூரில் உள்ள தேசிய மாணவர் ஒன்றியத்தின் (என்.எஸ்.யு.ஐ) தொகுதித் தலைவராக பணியாற்றினார். பின்னர் 2006 இல், நெல்லூர் நகரத்தின் இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியின்தொழிலாளர் குழு உறுப்பினராக பணியாற்றினார். 2009 இல், இவர் நெல்லூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் விளம்பரப் பிரிவின் தலைவராக இருந்தார். 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் முறையே நெல்லூர் நகரம் மற்றும் நெல்லூர் மாவட்டத்தின் இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். 2015 ஆம் ஆண்டில், ஆந்திராவின் இந்திய தேசிய காங்கிரஸின் மாநில சமூக ஊடக ஒருங்கிணைப்பாளராகவும், 2016 ஆம் ஆண்டில், ஆந்திராவின் இந்திய இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.[7][8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Hudco loan burden: Youth Cong. launches campaign". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
  2. "YSRCP govt's 100-day rule a failure: Jana Sena". thehansindia.com. பார்க்கப்பட்ட நாள் 8 September 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Keathamreddy Vinod Reddy". myneta.info.
  4. "JSP Contestants Information". janasenaparty.org.
  5. "Son of constable contests from Jana Sena". thehansindia.com. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
  6. "Inventive Ads - About Us". inventiveads.in.
  7. "Hudco loan burden: Youth Cong. launches campaign". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
  8. "Minister Narayana faces a tough maiden direct election". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 5 April 2019.

வெளி இணைப்புகள்

தொகு