கீதாஞ்சலி விரைவுவண்டி

தொடர்வண்டி
(கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் (Gitanjali Express) இந்தியாவின் இரு பெருநகரங்களான கொல்கத்தா-மும்பை இடையே தினசரி செயல்படக்கூடிய ரயில் சேவையாகும். இது மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலையத்தினை, மகாராஷ்டிராவில் உள்ள மும்பையின் ரயில் நிலையத்துடன் இணைக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் கிழக்குப் பகுதியினை, மேற்குப் பகுதியுடன் இணைக்கும் பணியினை இந்த ரயில்சேவை செய்கிறது. 12859, 12860 ஆகிய வண்டி எண்களுடன் செயல்படும் இந்த ரயில்சேவை, அதிவிரைவு சேவையின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளது. இது மும்பையில் இருந்து ஹவுராவிற்கு செல்லும் 1968 கிலோ மீட்டர் தூரத்தினை கடக்க 30 மணி நேரமும் 30 நிமிடங்களும் தேவைப்படுகிறது. திரும்பி மீண்டும் புறப்பட்ட இடத்தினை அடைய 31 மணி நேரமும் 30 நிமிடங்களும் எடுத்துக்கொள்கிறது.

இதன் ரயில் பெட்டிகளின் அமைப்பு பின்வருமாறு:[1] [L – SLR – GS – GS – A2 – A1 – B2 – B1 – S14 – PC – S13 – S12 – S11 – S10 – S9 – S8 – S7 – S6 – S5 – S4 – S3 – S2 – S1 – GS - SLR]

சம்பந்தப்பட்டவை

தொகு

ரவீந்திரநாத் தாகூர் எழுதிய மிகவும் பிரபலமான புத்தகம் ‘கீதாஞ்சலி’ ஆகும். இந்த ரயில் சேவையும், வங்காளத்தில் இருந்து புறப்படுவதால் கீதாஞ்சலி என்ற பெயர் பெற்றது. டிசம்பர் 26, 1977 இல் ரயில்வே அமைச்சராக இருந்த மது தான்ட்வேட், வகுப்பில்லாத ரயில்சேவையாக முதன் முதலாக கீதாஞ்சலி எக்ஸ்பிரஸைத் தொடங்கினார்.[2]

வந்தடையும் நேரமும் புறப்படும் நேரமும்

தொகு

வண்டி எண் 12859[3] மும்பையில் இருந்து காலை 6.00 மணியளவில் புறப்பட்டு, அதன் இலக்கான ஹவுரா சந்திப்பினை அடுத்த நாள் மதியம் 12.30 மணியளவில் வந்தடையும். வண்டி எண் 12860, ஹவுரா சந்திப்பில் இருந்து மதியம் 1.50 மணியளவில் புறப்பட்டு, மும்பை நகரத்தினை அடுத்த நாள் இரவு 9.20 மணியளவில் சென்றடையும்.[4]

வழித்தடமும் நிறுத்தங்களுக்கான நேரமும்

தொகு
எண் நிலையத்தின்

பெயர் (குறியீடு)

வரும்

நேரம்

புறப்படும்

நேரம்

நிற்கும்

நேரம் (நிமிடங்கள்)

கடந்த

தொலைவு (கி.மீ)

நாள் பாதை
1 மும்பை

சிஎஸ்டி (CSTM)

தொடக்கம் 06:00 0 0 கி.மீ 1 1
2 தாதர்

(DR)

06:13 06:15 2 நிமி 9 கி.மீ 1 1
3 கல்யாண்

சந்திப்பு (KYN)

06:52 06:55 3 நிமி 54 கி.மீ 1 1
4 இகத்புரி

(IGP)

08:43 08:45 2 நிமி 137 கி.மீ 1 1
5 நாசிக்

சாலை (NK)

09:28 09:30 2 நிமி 188 கி.மீ 1 1
6 ஜள்காவ்ன்

சந்திப்பு (JL)

11:58 12:00 2 நிமி 420 கி.மீ 1 1
7 புசாவல்

சந்திப்பு (BSL)

12:35 12:50 15 நிமி 445 கி.மீ 1 1
8 மால்காபூர்

(MKU)

13:24 13:25 1 நிமி 495 கி.மீ 1 1
9 ஷேஷௌன்

(SEG)

14:09 14:10 1 நிமி 547 கி.மீ 1 1
10 அகோலா

சந்திப்பு (AK)

14:40 14:45 5 நிமி 584 கி.மீ 1 1
11 பத்னேரா

சந்திப்பு (BD)

16:10 16:15 5 நிமி 663 கி.மீ 1 1
12 வார்தா

சந்திப்பு (WR)

17:29 17:32 3 நிமி 758 கி.மீ 1 1
13 நாக்பூர்

(NGP)

18:55 19:05 10 நிமி 837 கி.மீ 1 1
14 பண்டாரா

சாலை (BRD)

19:49 19:51 2 நிமி 899 கி.மீ 1 1
15 கோந்தியா

சந்திப்பு (G)

20:46 20:48 2 நிமி 967 கி.மீ 1 1
16 ராஜ்

நந்துகாவ்ன் (RJN)

22:03 22:05 2 நிமி 1072 கி.மீ 1 1
17 துர்க்

(DURG)

22:45 22:50 5 நிமி 1101 கி.மீ 1 1
18 ராய்ப்பூர்

சந்திப்பு (R)

23:25 23:35 10 நிமி 1138 கி.மீ 1 1
19 பிலாஸ்பூர்

சந்திப்பு (BSP)

01:15 01:30 15 நிமி 1248 கி.மீ 2 1
20 ராய்கர்

(RIG)

03:01 03:03 2 நிமி 1380 கி.மீ 2 1
21 ஜார்சுகுடா

சந்திப்பு (JSG)

04:25 04:27 2 நிமி 1454 கி.மீ 2 1
22 ராவுர்கேலா

(ROU)

05:43 05:50 7 நிமி 1555 கி.மீ 2 1
23 சக்ரதார்பூர்

(CKP)

07:10 07:12 2 நிமி 1656 கி.மீ 2 1
24 டாட்டாநகர்

சந்திப்பு (TATA)

08:20 08:30 10 நிமி 1719 கி.மீ 2 1
25 கரக்பூர்

சந்திப்பு (KGP)

10:20 10:25 5 நிமி 1853 கி.மீ 2 1
26 சாண்ட்ராகாச்சி

சந்திப்பு (SRC)

11:51 11:53 2 நிமி 1961 கி.மீ 2 1
27 ஹவுரா

சந்திப்பு (HWH)

12:30 முடிவு 0 1968 கி.மீ 2 1

குறிப்புகள்

தொகு
  1. "Details of Stations between Mumbai CST and Howrah Junction". Indian Rail Info. பார்க்கப்பட்ட நாள் 11th July 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. ''Dialogue with Life'' by Madhu Dandvate. Books.google.com. பார்க்கப்பட்ட நாள் 11th July 2015. {{cite book}}: Check date values in: |accessdate= (help)
  3. "Gitanjali Express Timetable". cleartrip.com. Archived from the original on 2015-07-06. பார்க்கப்பட்ட நாள் 11th July 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Running Train Status". Running Status. பார்க்கப்பட்ட நாள் 11th July 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதாஞ்சலி_விரைவுவண்டி&oldid=3759980" இலிருந்து மீள்விக்கப்பட்டது