கீதாரி
கீதாரி (Keethari) எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி 2008 ஆம் ஆண்டில் எழுதிய நாவல் ஆகும். முழுக்க முழுக்க மேய்ச்சல் வாழ்க்கை கொண்ட மக்களின் வாழ்க்கைப் பின்னணியை நாவலாக்கியிருக்கிறார். ஆடுமேய்ப்பவர்களின் வாழ்க்கை பற்றிய ஏராளமான நுண்ணிய செய்திகள் நாவலில் இடம்பெற்றுள்ளன. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் புத்தகத்தை வெளியிட்டது.[1]
நாவலின் மையக்கருத்து
தொகு‘கீதாரி” என்பது இடையரைக் குறிக்கும். இந் நாவலில் இடையர்களின் தலைவன் 'கீதாரி' என்னும் சொல்லால் அழைக்கப்படுகிறார். இந்நாவல் முழுக்க இடையர் வாழ்வைச் சித்தரிக்கிறது.[2][3]
நூலாசிரியர்
தொகுஎழுத்தாளர் சு. தமிழ்ச்செல்வி திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவராவார். ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மாணிக்கம், அளம், பொன்னாச்சரம், ஆறுகாட்டுத்துறை, கீதாரி, தொப்புள்கொடி மற்றும் கண்ணகி ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "மாணிக்கம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
சிறப்பு
தொகுதிருச்சி ஈ. வே. ரா. கல்லூரியில் முதுகலைத் தமிழ்ப் பாடத்திட்டத்தில் இந்நாவல் இடம்பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "சு. தமிழ்ச்செல்வியின் "கீதாரி" நாவல் கதைச்சுருக்கமும் விமர்சனமும்! - முனைவர் பா. ஈஸ்வரன் -", www.geotamil.com, பார்க்கப்பட்ட நாள் 2024-05-23
- ↑ "சு. தமிழ்ச்செல்வியின் கீதாரி புத்தக விமர்சனம் !", TON தமிழ் செய்திகள் (in அமெரிக்க ஆங்கிலம்), 2018-11-22, பார்க்கப்பட்ட நாள் 2024-05-23
- ↑ "கீதாரி நாவலில் விளிம்புநிலை மக்கள்", வல்லமை (in அமெரிக்க ஆங்கிலம்), 2018-08-12, பார்க்கப்பட்ட நாள் 2024-05-23