கீதா காலனி பாலம்

யமுனை நதியின் மீதுள்ள பாலம்

கீதா காலனி பாலம் (Geeta Colony Bridge) இந்தியாவின் தலைநகரமான புதுதில்லியில் அமைந்துள்ளது. கீதா காலனி மேம்பாலம் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. மக்கள் தொகை மிகுந்த கிழக்கு தில்லி மாவட்டத்தின் ஒரு பகுதியையும் ராச்காட்டுக்கு அருகிலுள்ள சுற்றுச்சாலையையும் கீதா காலனி பாலம் இணைக்கிறது. [1][2]

கீதா காலனி பாலம்
Geeta Colony Bridge
போக்குவரத்து 6 வழிப்பாதை
வடிவமைப்பு T-பகுதி, உத்தரப் பாலம்
கட்டுமானப் பொருள் காங்கிரீட்டு
மொத்த நீளம் 560 m
அகலம் 27.1மீ
வருடாந்திர சராசரி தினசரி போக்குவரத்து வாகனப் பாதை
கட்டுமானம் தொடங்கிய தேதி திசம்பர் 2004
கட்டுமானம் முடிந்த தேதி ஆகத்து 2008
அமைவு 28°39′05.33″N 77°15′47.58″E / 28.6514806°N 77.2632167°E / 28.6514806; 77.2632167

பயன்

தொகு

கீதா காலனி பாலம் கிழக்கு, வடக்கு, வடமேற்கு மற்றும் மத்திய தில்லி பகுதிகளுக்கிடையில் ஓர் இணைப்பை வழங்குகிறது. கிழக்கு தில்லி மற்றும் பழைய தில்லிக்கு இடையில் ஒரு மாற்றுப் பாதையை வழங்குவதன் மூலம் இப்பாலம் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த யமுனா பாலம் மற்றும் இந்திரப்பிரசுத்தா பாலம் போன்றவற்றின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கிறது. [3] நகரின் மையமாக அமைந்துள்ள காரணத்தால் பயணிகளுக்கு ஒரு முக்கியமான பாதையாக அமைந்து அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிக்கு இப்பாலம் சேவை செய்கிறது.

வடிவமைப்பு

தொகு

கீதா காலனி பாலம் 560 மீட்டர் பரப்பளவில் 14 40 மீட்டர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட இரட்டை வண்டிப்பாதை பாலமாகக் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வண்டிப்பாதையும் 9 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளன. இருபுறமும் சைக்கிள் மற்றும் பாதசாரி பாதைகளும் ஒரு மைய எல்லைக்கோடும் கொண்டுள்ளது. பாலத்தின் மொத்த அகலம் 27.1 மீட்டர்களாகும். நாள்தோறும் 220,000 வாகனங்கள் பாலத்தைக் கடக்கின்றன. [2]

வரலாறு

தொகு

2004 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 29 அன்று, நவயுகா பொறியியல் நிறுவனம் 99.765 கோடி ரூபாய் செலவில் இப்பாலம் கட்ட ஒப்பந்தம் செய்தது. இதற்கு 36 மாத கட்டுமான காலம் ஒதுக்கப்பட்டது. [1] 2008 ஆம் ஆகத்து மாதம் கட்டி முடிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 27 அன்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக பாலம் தடைசெய்யப்பட்டது, இதனால் குறிப்பிடத்தக்க போக்குவரத்து தாமதங்கள் ஏற்பட்டன. [4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Planning, Design, and Construction of Bridge Over River Yamuna Near Geeta Colony, Delhi". Archived from the original on 3 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 3 November 2018.
  2. 2.0 2.1 "East Delhi bridge awaits disaster". https://m.timesofindia.com/city/delhi/East-Delhi-bridge-awaits-disaster/amp_articleshow/15320441.cms. பார்த்த நாள்: 3 November 2018. 
  3. "New Delhi New Yamuna bridge to be ready next year". https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/new-yamuna-bridge-to-be-ready-next-year/article3124263.ece/amp/. பார்த்த நாள்: 3 November 2018. 
  4. Bhat, Nishi. "Geeta Colony bridge barricaded due to CAA protests". CitySpidey. பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
  5. February 24, 2020. "Delhi: Brace for more traffic jams as protests at Jafrabad, Khureji prompt roadblocks". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-31.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதா_காலனி_பாலம்&oldid=4088845" இலிருந்து மீள்விக்கப்பட்டது