ராஜ்காட்
காந்தியின் படுகொலை
ராஜ்காட் (Raj Ghat) (இந்தி: राज घाट), யமுனை ஆற்றங்கரையில் பழைய தில்லியில் அமைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். இங்கு மகாத்மா காந்தி நினைவிடம் அமைந்துள்ளது.[1][2] காந்தியின் படுகொலைக்குப் பின் அவரது பூத உடல் இவ்விடத்தில் 31 சனவரி 1948 அன்று எரியூட்டப்பட்டு, பின்னர் நினைவிடம் (சமாதி) அமைக்கப்பட்டது. எனவே இவ்விடம் ராஜ்காட் (மன்னர்களின் படித்துறை) என்று அழைக்கப்படுகிறது.
ராஜ்காட் பகுதியில் அமைந்த பிற முக்கிய நினைவிடங்கள்
தொகுராஜ்காட் எனும் வடமொழி சொல்லிற்கு அரசர்களின் படித்துறை என்று பொருள். யமுனை ஆற்றங்கரையின் படித்துறைகளில் அமைந்த நினைவிடங்களில், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி நினைவிடங்கள் புகழ்பெற்றவை.
ராஜ்காட் பகுதியில் அமைந்த நினைவிடங்கள்
தொகுராஜ்காட் தொடர்பான நினைவிடங்கள்;
பெயர் | பதவி / பட்டம் | மறைந்த ஆண்டு | நினைவிடப் பெயர் | பொருள் | Area (in acres)[3] |
சிறப்பு | |
---|---|---|---|---|---|---|---|
மகாத்மா காந்தி | தேசத் தந்தை | 1948 | ராஜ்காட் | மன்னர்களின் படித்துறை | 44.35 | கரும் பளிங்குக் கல் மேடை | |
ஜவகர்லால் நேரு | இந்தியப் பிரதமர் | 1964 | சாந்திவனம் | அமைதியின் தோட்டம் | 52.6 | நீண்ட அகலமான புல்வெளிகள் கொண்ட தோட்டம் | |
லால் பகதூர் சாஸ்திரி | இந்தியப் பிரதமர் | 1966 | விஜய்காட் | வெற்றி மேடை | 40 | லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த போது நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் இந்திய வெற்றியின் நினைவாக | |
சஞ்சய் காந்தி | நாடாளுமன்ற உறுப்பினர் | 1980 | — | — | சாந்திவனத்திற்கு அருகில் | ||
இந்திரா காந்தி | இந்தியப் பிரதமர் | 1984 | சக்தி ஸ்தல் | சக்தியின் பிறப்பிடம் | 45 | சிவப்பு-சாம்பல் நிறம் கலந்த ஒற்றை கல் | |
ஜெகசீவன்ராம் | இந்தியத் துணைப் பிரதமர் | 1986 | சம்தா ஸ்தல் | சமத்துவமிடம் | 12.5 | — | |
சரண் சிங் | இந்தியப் பிரதமர் | 1987 | கிசான் காட் | விவசாயிகளின் மேடை | 19 | — | |
ராஜீவ் காந்தி | இந்தியப் பிரதமர் | 1991 | வீர் பூமி | வீரத்தின் விளைநிலம் | 15 | பெரிய தாமரையைச் சுற்றி 46 சிறு தாமரைகள் கொண்ட மேடை [3] | |
ஜெயில் சிங் | இந்தியக் குடியரசுத் தலைவர் | 1994 | ஏக்தா ஸ்தல் | ஒற்றுமையின் உறைவிடம் | 22.56 | — | |
சங்கர் தயாள் சர்மா[4] | இந்தியக் குடியரசுத் தலைவர் | 1999 | கர்ம பூமி | கர்ம பூமி | விஜய்காட் அருகில் | ||
சந்திரசேகர் | இந்தியப் பிரதமர் | 2007 | ஜனநாயக் ஸ்தல்[5] | மக்கள் தலைவரின் நினைவிடம் | — | ||
ஐ. கே. குஜரால் | இந்தியப் பிரதமர் | 2012 | இராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தல் | தேசிய நினைவிடம் | — | ||
தேவிலால் | இந்தியத் துணைப் பிரதமர் | 2001 | சங்கர்ஷ் ஸ்தல் | போரின் பிறப்பிடம் | கிசான் காட் அருகில் | ||
பி. வி. நரசிம்ம ராவ் | இந்தியப் பிரதமர் | 2004 | ராஷ்டிரிய ஸ்மிரிதி ஸ்தல் | தேசிய நினைவிடம் | — | ||
அடல் பிகாரி வாஜ்பாய் | இந்தியப் பிரதமர் | 2018 | ராஷ்டிரிய ஸ்மிரிதி ஸ்தல்[6] [7] | தேசிய நினைவிடம் | — |
மேற்கோள்கள்
தொகு- ↑ Fanshawe, p. 67
- ↑ 1863 Atlas Map of Delhi
- ↑ 3.0 3.1 "no-space-for-samadhis-vvips-to-share-memorial-place-in-delhi". Rediff. 2013-05-16. http://www.rediff.com/news/report/no-space-for-samadhis-vvips-to-share-memorial-place-in-delhi/20130516.htm. பார்த்த நாள்: 2013-11-30.
- ↑ "Tearful farewell to S.D. Sharma". The Tribune (The Tribune Trust). 1999-12-28. http://www.tribuneindia.com/1999/99dec29/nation.htm. பார்த்த நாள்: 2008-12-21.
- ↑ http://timesofindia.indiatimes.com/india/Former-PM-Chandrashekhars-samadhi-to-be-called-Jannayak-Sthal/articleshow/47022230.cms
- ↑ Construction of ‘Rashtriya Smriti’ at the Samadhis Complex in New Delhi.
- ↑ History, significance of Rashtriya Smriti Sthal where Atal Bihari Vajpayee’s last rites will be held
- H.C. Fanshawe (1998). Delhi, past and present. Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-1318-X.