கீரனூர் முத்து

கீரனூர் முத்து (1943-1965)[1] என்று அறியப்படும் முத்து, இந்தியாவில் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963ஐ அமல் படுத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிப்புப் போராட்டத்தின்போது, நஞ்சருந்தி இறந்த ஒரு போராளி ஆவார்.

வாழ்க்கைதொகு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி, பாலைவனம் ஜமீனைச் சேர்ந்த சின்னச்சுனையக்காடு என்ற கிராமத்தில் 1943 இல் பிறந்தவர். இவர் 7ஆம் வகுப்புவரை படித்தவர். படிக்கும் போதே தமிழ் ஆர்வத்துடனும், பற்றுடனும் இருந்து வந்தார்.[2] குடும்பச் சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு படிக்காமல் தன் தந்தையுடன் வேளாண் பணியில் ஈடுபட்டு வந்தார். பிறகு 1965ஆம் ஆண்டு புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்தில் உள்ள கீரனூரில் உணவு விடுதியில் வேலை பார்த்து வந்தார்.

இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம்தொகு

1965 இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டும் வந்த பலர் தீக்குளித்தும், நஞ்சருந்தியும் இறந்த செய்திகளும், ஆயிரக்கனக்கானோர் தடியடி துப்பாக்கி சூட்டுக்கு ஆளான கொடுமைகளைப் படித்தும் கேள்விபட்டும் அறிந்து மனம் வருந்தினார்.

தற்கொலைதொகு

"இந்தி தணிப்பை நிறுத்துங்கள்" என்று அன்றைய முதல்வர் பக்தவச்சலத்திற்கும், "தமிழைக் காக்கப் பாடுபடுங்கள்" என்று அண்ணாவுக்கும் கடிதங்களை எழுதி வைத்துக் கொண்டு 1965 பிப்பிரவரி மாதம் நஞ்சுண்டு இறந்து கிடந்தார்.[3] 1967இல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் முத்து இறந்து கிடந்த இடத்தில் சீரணி அரங்கம் ஒன்று கட்டப்பட்டு தியாகி முத்து சீரணி அரங்கு எனப் பெயர் சூட்டப்பட்டது.[4]

குறிப்புகள்தொகு

  1. http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article6819046.ece
  2. தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 21
  3. "மொழிப்போர் ஈகி” கீரனூர் முத்து". akaramuthala.in. பார்த்த நாள் 25 ஏப்ரல் 2016.
  4. தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 22

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீரனூர்_முத்து&oldid=2299115" இருந்து மீள்விக்கப்பட்டது