கீரமங்கலம் மெய்நின்றநாதர் கோயில்

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
(கீரமங்கலம் சிவன் சிலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கீரமங்கலம் மெய்நின்றநாதர் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த கீரமங்கலம் நகரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமானதாகும்.

கீரமங்கலம் 81 அடி உயர சிவன் சிலை

சிறப்புகள்

தொகு

கோவிலின் முன்னர் உள்ள தடாகத்தில் 2016ம் ஆண்டு கட்டப்பட்ட பீடத்துடன் சேர்த்து 81 அடி உயரமுடைய நின்ற நிலையில் உள்ளது சிவன் சிலை. இந்த சிலை தென்னிந்தியாவில் உயரமான சிவன் சிலை எனவும் கூறப்படுகிறது. கோயிலின் வாசலில் சங்கப்புலவர் நக்கீரனின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை 7.25 அடி உயரம் கொண்டதாகும். இந்த சிலைகள் 2016 ஆம் ஆண்டு சனவரி மாதம் 20ஆம் நாளன்று திறக்கப்பட்டன.

கோவிலில் பிரகாரத்தில் விநாயகர், முருகப்பெருமான், தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் மற்றும் பைரவர் என அருள்பாளிக்கின்றனர். கொடிமரத்தின் அருகே இருக்கும் பிரதோஷ நந்திக்கு பிரதோஷ தினங்களில் பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

கீரமங்கலத்தை சுற்றி இருக்கும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ளவர்களின் திருமணங்கள் 75% இந்த கோவில் வளாகத்தில் நடைபெறுவது கூடுதல் சிறப்பாகும்.[1][2][3]

அமைப்பு

தொகு

27 அடி உயர பீடத்தில் 54 அடி உயரத்தில் 81 அடி உயரத்தினைக் கொண்டு சிவன் சிலை அமைந்துள்ளது. தடாகத்தின் நடுவே இருக்கும் 81 அடி சிவன் சிலைக்கு நேராக கோவிலின் முன்னர் 7 1/2 அடி உயரத்தில் புலவர் நக்கீரருக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் மெய்யே உருவாக மெய்நின்ற நாதர் கிழக்கு திசை நோக்கி காட்சி தருகிறார். அவருக்கு இடப்புறத்தில் தெற்கு திசை நோக்கி அருள்பாளிக்கிறார் அம்பிகை ஒப்பில்லாமணி.

பெயர்க்காரணம்

தொகு

சங்க இலக்கியத்தில் ‘‘நக்கீரமங்கலத்தில் சிவனுக்கு 5 களஞ்சு‘‘ என்ற பாடல் வரி வருகிறது. அந்த வரியில் வரும் இடம் பழைய நக்கீரமங்கலம் இன்றைய கீரமங்கலம் என்று குறிப்பிடப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகளில் கோயிலுக்காக தானம் கொடுத்தவர்களின் பட்டியல் உள்ளது.[4] மேலும் 800 ஆண்டுகளுக்கு முன்பு மெய்நின்றநாதருக்கும் ஒப்பிலாமணி அம்மையாருக்கும் குடமுழுக்கு நடத்தப்பட்டதாகவும் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது.[1]

 

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-01-22. பார்க்கப்பட்ட நாள் 2016-01-22.
  2. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=159181[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://www.dailythanthi.com/News/Districts/Pudukottai/2016/01/21014753/The-81foottall-statues-of-Shiva7-feet-kiramankalat.vpf
  4. http://www.dinamani.com/edition_trichy/pudukottai/article1375124.ece