கீர்த்தனா குமார்
கீர்த்தனா குமார் (Kirtana Kumar பிறப்பு 8 மார்ச் 1966) [2] என்பவர் பெங்களூரில் உள்ள ஒரு இந்திய நடிகை, இயக்குநர், திரைப்பட படைப்பாளி ஆவார். இவர் நாடகம், திரைப்படம் குறித்து எழுதிவருகிறார். அவை பல்வேறு தேசிய இதழ்களில் வெளியாகின்றன. இவர் ஐரோப்பிய செவ்வியல் மற்றும் அமெரிக்க இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். நாடகம், திரைப்படம் போன்றவற்றில் இவரது பங்களிப்புக்காக மெக்ஆர்தர் அறக்கட்டளை மற்றும் கலைக்கான இந்தியா அறக்கட்டளை உட்பட பல முக்கிய விருதுகள் மற்றும் பெல்லோஷிப்களைப் பெற்றுள்ளார். இவர் பெங்களூரில் உள்ள சோபியா உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இவர் பெண் கலைஞர்கள் குழுவின் அறங்காவலராக உள்ளார், குழந்தைகளுக்கான நாடக பட்டறையை ஆண்டு முழுவதும் நடத்தி வருகிறார். மேலும் பெங்களூரில் உள்ள கிராமப்புற கலைஞர்கள் வசிப்பிடமான இன்ஃபினைட் சோல்ஸ் ஃபார்மின் இணை உரிமையாளராகவும் இவர் உள்ளார். [3]
கீர்த்தனா குமார் Kirtana Kumar | |
---|---|
பிறப்பு | 8 மார்ச்சு 1966 பெங்களூர், கருநாடகம் |
தேசியம் | இந்தியர் |
பணி | நாடகக் கலைஞர், நாடக பயிற்சியாளர், திரைப்பட படைப்பாளி |
வாழ்க்கைத் துணை | கோனார்க் ரெட்டி [1] |
நாடக வாழ்க்கை
தொகுகீர்த்தனா குமார் [4] "தி லாஸ் ஏஞ்சல்ஸ் தியேட்டர் சென்டரில்" தி ஏசியன்-அமெரிக்கன் தியேட்டர் பிராஜெக்ட் மூலம் ஆறு ஆண்டுகள் பயிற்சி பெற்று நடிகராக இருந்தார். [5] இவர் சுசுகி தியேட்டர் (ம) புடோ, தங்-டா, களரி பயட்டு மற்றும் குரல் நுட்பத்தில் பயிற்சி பெற்றவர். இவர் மற்ற கலைஞர்களுடன் தொடர்ந்து கற்று பயிற்சி அளித்து வருகிறார்.
பல ஆண்டுகளாக, இலண்டனில் உள்ள குவெஸ்டர்ஸ் நாடக அரங்கில் "ஆக்னஸ் ஆஃப் காட்", "கதி & பகவதாஜுகம்", லாஸ் ஏஞ்சல்ஸ், காஸ்ட் நாகர அரங்கில் பில் சி. டேவிசின் "ஸ்பைன்", திரெஸ்டில் நாடக அரங்கில் "சகுந்தலா", செயின்ட் அல்பன்ஸ் மற்றும் ஸ்ரீ அரவிந்தரின் சாவித்திரியை தழுவி எழுதப்பட்ட நாடகமான "இன் தி ஹவர் ஆஃப் காட்" போன்ற நாடகங்களில் இவர் முக்கிய பாத்திரங்களை ஏற்றார். இவரது தயாரிப்பான "தி மெய்ட்ஸ்" ரங்க சங்கரா விழா மற்றும் ரங்கயானாவில் நடந்த பகூரூபி விழா உட்பட பல அரங்கேற்றபட்டது. இவரது தனிப் படைப்பில் டேரியோ ஃபோ "மெடியா" & "ஆர்கஸ்மோ அடல்டோ", "அன்ரூலி வுமன் - அல்லது ஷேக்ஸ்பியர்ஸ் சிக்ஸ்" ஆகியவை அடங்கும், இது ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் பெண் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு இவர் வடிவமைத்த நாடகம் ஆகும். "தி வெடிங் பார்ட்டி" என்ற நாடகத்துக்காக இந்தியா ஃபவுண்டேஷன் ஃபார் தி ஆர்ட்சிடமிருந்து மானியம் பெற்றார், இது மிகவும் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்ற நாடகமாக இருந்தது. அதைத் தொடர்ந்து, இவர் யூஜின் அயோனெஸ்கோவின் "தி பால்ட் சோப்ரானோ" ஐ இயக்கினார் மேலும் மிக அண்மையில், ஜாக்ரிதி தியேட்டருக்காக டாரியோ ஃபோவின் "ஆர்கஸ்மோ அடல்டோ எஸ்கேப்ஸ் ஃப்ரம் தி ஜூ"வை [6] இயக்கி நடித்தார். இவர் தற்போது ஸ்டீவன் பெர்காஃப்பின் "தி சீக்ரெட் லவ் லைஃப் ஆஃப் ஓபிலியா"வை பெங்களூர் மேடைக்காக இயக்கி வருகிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "'We've worked together forever'". 19 December 2006 – via www.thehindu.com.
- ↑ "Page not found News" – via www.thehindu.com.
{{cite web}}
: Cite uses generic title (help) - ↑ "Amazing woman- Kirtana Kumar - B'Personal". bpersonal.bkhush.com.
- ↑ "Chinwag with...Kirtana Kumar". Bangalore Mirror.
- ↑ "The Los Angeles Theatre Center - The LATC". The Los Angeles Theatre Center - The LATC.
- ↑ Datta, Sravasti (9 November 2012). "Bold vignettes" – via www.thehindu.com.
மூலங்கள்
தொகு- "Project 560 2017 Onwards - India Foundation for the Arts". www.indiaifa.org. Archived from the original on 2018-06-10. பார்க்கப்பட்ட நாள் 2024-02-20.