கீழக்கரை ஏர்வாடி தர்கா

ஏர்வாடி தர்கா (Erwadi Dargah) குதுபுஸ் சுல்தான் சையத் இப்ராகிம் பாதுசாவின் சன்னதி இருக்கும் ஒரு புனித இசுலாமியக் கல்லறையாகும். இது தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி கிராமத்தில் அமைந்துள்ளது. இது சையத் இப்ராகிம் ஒலியுல்லா அல்லது சையத் அலி என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இது சையத் அலிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கிய தர்கா ஆகும். இங்கு மூன்று தர்காக்கள் உள்ளன, சையத்தின் தாய் பாத்திமா ஒன்றிலும், இரண்டாவதாக அவரது மனைவி சையத் அலி பாத்திமா, மூன்றாவதாக அவரது மகன் சையத் அபு தாகிரும் உள்ளனர். தர்காக்களை கட்டபட்ட நிலம் ராமநாதபுரம் மகாராஜாவிலிருந்து கிடைத்தது, ஆற்காடு நவாப் 1207 ஆம் ஆண்டு அரபு தேதியில் முக்கிய தர்காவைக் கட்டியெழுப்பினார்.

ஏர்வாடி தர்கா

தர்கா மனநோயாளர்களின் மனச்சோர்வைக் குணப்படுத்துவதற்கு நன்கு அறியப்பட்டிருக்கிறது, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரகணக்கில் பக்தர்கள் ஒவ்வொரு நாளும் இந்த தற்காவிற்கு வருகின்றனர்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழக்கரை_ஏர்வாடி_தர்கா&oldid=3628633" இலிருந்து மீள்விக்கப்பட்டது