கீழ் சுபன்சிரி மாவட்டம்

கீழ் சுபன்சிரி மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். 1987 ஆம் ஆண்டு சுபன்சிரி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்ட போது உருவாக்கப்பட்டவை கீழ் மற்றும் மேல் சுபன்சிரி மாவட்டங்கள்.

கீழ் சுபன்சிரி மாவட்டம்
Arunachal Pradesh Lower Subansiri district locator map.svg
கீழ் சுபன்சிரிமாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம்
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம்ஜிரோ
மக்கட்தொகை83,030 (2011)
படிப்பறிவு76.3%
பாலின விகிதம்975
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

அமைப்புதொகு

இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக ஜிரோ நகரம் உள்ளது. இந்த மாவட்டத்தில் 6 நிருவாக வட்டங்கள் உள்ளன, அவற்றின் பட்டியல் பின்வருமாறு: ஜிரோ, யாசுளி, பிஸ்தனா, ராகா, கம்பொரிஜோ, மற்றும் டோல்லுங்முக். இந்த மாவட்டம் இரண்டு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.

மக்கள்தொகு

இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான நியிசி மற்றும் அபதனி இனத்தை சேர்ந்தவர்கள்.

மொழிதொகு

திபெத்திய- பர்மா மொழிக் குடும்பத்தில் வரும் அபதனி மொழி பேசுகின்றனர்.

சுற்றுலாத் தளங்கள்தொகு

இந்த மாவட்டத்தில் நடக்கும் விழாக்களான நியோகும், பூரி-பூட் மற்றும் டிரீ விழா மிகவும் பிரபலமானவை. 1995 ஆம் ஆண்டு இந்த மாவட்டத்தில் டேல் பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயம் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு