ஜிரோ
ஜிரோ இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள மலைப்பகுதி ஆகும். தலைநகர் இடாநகரிலிருந்து 150 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய இடமாக இதனை இடம் பெறச்செய்ய இந்தியத் தொல்லியல் துறை முயற்சியெடுத்து வருகிறது.
ஜிரோ (Ziro) | |
---|---|
மலைப்பகுதி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அருணாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | கீழ் சுபன்சிரி மாவட்டம் |
ஏற்றம் | 1,700 m (5,600 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 12,289 |
நேர வலயம் | ஒசநே+5:30 (ஐ.எஸ்.டி) |
இடக் குறியீடு | 03788 |
அபதானி பழங்குடி மக்கள் இப்பகுதியில் வசித்துவருகின்றனர். இப்பழங்குடியினர் ஒரே பகுதியில் நிலைத்து வசிக்கும் குணம் கொண்டோர். அபூர்வமான ஆர்சிட் வகை பூக்கள் இப்பகுதியில் பூக்கின்றன.[1]
பெரிய சிவலிங்கம்
தொகுஜூலை 2004 ஆம் ஆண்டு இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சித்தேஸ்வர்நாத் கோயிலின் சிவலிங்கம் மிகப்பெரியது. பிரேம் சுபா எனும் நேபாளியால் மரம் வெட்டுகையில் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த சிவலிங்கத்தின் வரலாறு சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.[2]
புவியியல் அமைப்பு
தொகு27°33′59″N 93°49′53″E / 27.56639°N 93.83139°E அருணாச்சலப் பிரதேசத்தின் பழைமையான நகரான ஜீரோ கீழ் சுபன்சிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
மக்கள்தொகை
தொகு2001 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இங்கு மக்கள்தொகை 12,289. இதில் ஆண்கள் 52% பெண்கள் 48%. 17% பேர் ஆறு வயதிற்குக் கீழுள்ள குழந்தைகள்.[3]
கல்வி
தொகுஅருணாச்சலப் பிரதேசத்தின் அதிக அளவு பள்ளிகள் இங்கமைந்துள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-28. பார்க்கப்பட்ட நாள் 2014-08-30.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-28. பார்க்கப்பட்ட நாள் 2014-08-30.
- ↑ web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 பரணிடப்பட்டது 2004-06-16 at the வந்தவழி இயந்திரம்