கீழ் பவானி திட்ட கால்வாய்

கீழ் பவானி திட்ட கால்வாய் என்பது பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்படுள்ள பவானிசாகர் அணையிலிருந்து செல்லும் 125 மைல் நீளமுடைய பாசன வாய்க்காலாகும். இதனால் ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்கள் பயன் பெறுகின்றன. இக்கால்வாயின் மூலம் 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பெருந்துறை அருகில் ஓடும் கீழ் பவானி திட்ட கால்வாய்

முதன்மை கால்வாய் அதிகபட்சமாக 2300 கன அடி நீரை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன்மை கால்வாயிலிருந்து நீரை வயல்களுக்கு கொண்டு செல்லும் வாய்க்கால்களின் மதகு கன அடிக்கு 60 ஏக்கர் பயன்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இக்கால்வாய் ஆண்டுக்கு இரு முறை நீர் பெறுகிறது. பொதுவாக ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 15 வரை ஒரு முறையும் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 15 வரை மற்றொரு முறையும் நீர் பெறுகிறது. அணையின் நீர் இருப்பை கணக்கில் கொண்டு நீர் திறக்கப்படும் தேதி மாற்றத்துக்குள்ளாகும்.

கான்கிரீட் தளமும் எதிர்ப்பும்

தொகு

2013 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசு கீழ் பவானி கால்வாயின் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டது, இருப்பினும், விவசாயிகள் அதை கடுமையாக எதிர்த்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது . இப்போது மீண்டும் பல ஆண்டுகளுக்குப் பிறகு, கான்கிரீட் தளம் உள்ளிட்ட புனரமைப்புப் பணிகளைக் குறிப்பிட்டு, மே 1, 2023[1] அன்று இந்தத் திட்டத்தைத் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்ததிட்டம் தொடங்கினால், இது நிலத்தடி நீர் செறிவூட்டலை கடுமையாக பாதிக்கும், இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் சாமானிய மக்களை நேரடியாகப் பாதிக்கும். இதனால் ஒட்டுமொத்த வேளாண் சூழலமைப்பு மற்றும் குடிநீர் வழங்கல் அமைப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்[2] என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். இவ்வாறு கான்க்ரீட் தளம் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர் வற்றி நிலம் பாலைவனமாகிவிடும் என்ற கருத்தும் உள்ளது.

சில விவசாயிகள் கான்கிரீட் தளம் அமைப்பதை ஆதரிக்கின்றனர், ஆனால் இப்பகுதியில் வாழும் பெரும்பாலான விவசாயிகள் கான்கிரீட் தளம் அமைப்பதை எதிர்க்கின்றனர் . இந்த மாவட்டங்களில் குறைந்த மழைப்பொழிவு பெறுவதுடன், அரை வறண்ட பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த கால்வாய் மட்டுமே இங்கு வாழும் அனைத்து மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. பல பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகள் இந்த கால்வாயை நகர்புற மற்றும் ஊரக குடிநீர் விநியோகத்திற்கு நம்பியுள்ளன. இந்த கான்கிரீட்தளம் அமைப்பதற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

வெளி இணைப்பு

தொகு

http://www.jalaspandana.org/node/21 பரணிடப்பட்டது 2009-12-02 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Modernisation of LBP canal set to begin on May 1: TN Minister". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-05-01.
  2. Bureau, Dt Next. "Farmers hold demo against Lower Bhavani Project canal concrete lining". DT next (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-01.