குசராத்தி கதி
குசராத்தி கதி (ஆங்கிலம்: Gujarati kadhi; குசராத்தி: કઢી) என்பது கதி எனும் உணவின் குசராத்தி வகை தயாரிப்பாகும்.[1] இது மோர் அல்லது தயிர் (தயிர்) மற்றும் கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படும் மிகவும் பிரபலமான குசராத்தி உணவாகும்.[2] கதி குசராத்தி சமையலில் இன்றியமையாத பதார்த்தமாகும்.[3]
சூடான குசராத்தி கதி | |
வகை | Soup |
---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | Hot |
முக்கிய சேர்பொருட்கள் | தயிர், கடலை மாவு |
வேறுபாடுகள் | பஞ்சாபி கதி, சிந்திக் கதி |
பிரபலம்
தொகுஇந்தியாவிற்கு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா வந்தபோது குசராத்தி கதி பரிமாறப்பட்டது. சீன அதிபர் அகமதாபாத்திற்குச் சென்றபோதும் இவரது உணவு வகையில் கதியும் சேர்க்கப்பட்டது. கதி இந்தியாவில் வெவ்வேறு வகைகளாகத் தயாரிக்கப்படுகிறது. இதன் காரணமாகக் குசராத்தி கதி சிந்தி கதி, ராஜஸ்தானி கதி, போஹ்ரி கதி அல்லது யுபி காதி என அழைக்கப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் வேறுபட்டது. ஆனால் அனைத்து வகையும் தயிரினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆனால் புளியினை அடிப்படையாகக் கொண்டது சிந்தி கதி. குசராத்தில் இது கிச்சடி அல்லது வேகவைத்த அரிசியுடன் பரிமாறப்படுகிறது.[4]
தயாரிப்பு
தொகுபஞ்சாபி காதியுடன் ஒப்பிடும் போது குஜராத்தி காதி இலகுவானது.[5] தயிர் மற்றும் உளுந்து மாவு சில குவளை தண்ணீரில் கலந்து திரவ கலவையாக மாற்றப்படுகிறது. நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி மற்றும் சாதத்தை ஒரு பாத்திரத்தில் மிதமான தீயில் வறுத்து, தயிர் கலந்து சில நிமிடங்கள் சூடுபடுத்திக் கிளறப்படுகிறது. கிச்சடி, நாண், சப்பாத்தி அல்லது சாதத்துடன் சூடாகப் பரிமாறப்படும்.[6]
தேவையான பொருட்கள்
தொகுதயிர், உளுந்து மாவு, பெருங்காயம், இலவங்கப்பட்டை தூள், கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள்.[7]
வகைகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The taste of Gujarat". Archived from the original on April 23, 2015.
- ↑ "'Gujarati Kadhi', 'Bhuna Gosht Boti' for Obama". India Today. India Today.
- ↑ "How to Make Gujarati Kadhi".
- ↑ "Express Recipe: How to make Gujarati Kadhi". Indian Express.
- ↑ "Recipe: Delicious hot Gujarati kadhi". The Times of india. http://timesofindia.indiatimes.com/life-style/food/recipes/Recipe-Delicious-hot-Gujarati-kadhi/articleshow/20712703.cms.
- ↑ "Recipe: Gujarati Kadhi". http://zeenews.india.com/entertainment/gourmet/recipe/recipe-gujarati-kadhi_2563.htm.
- ↑ "Gujarati Kadhi". food.ndtv.com/. NDTV.
- ↑ "Express Recipe: How to make Gujarati Kadhi".
- ↑ "The Kathiawadi thali, fully loaded". http://timesofindia.indiatimes.com/life-style/food/food-reviews/The-Kathiawadi-thali-fully-loaded/articleshow/45318573.cms.
மேலும் படிக்க
தொகு- Flavorful India: Treasured Recipes from a Gujarati Family. Hippocrene Books.
- Taste Of Gujarat. Netlancers Inc.[தொடர்பிழந்த இணைப்பு]