குஞ்ச பிகாரி மெகர்
இந்தியாவின் ஒடிசா மாநில கைவினைஞர்
குஞ்ச பிகாரி மெகர் (Kunja Bihari Meher) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கைவினைஞர் மற்றும் நெசவாளர் ஆவார்.[1] ஒடிசா மாநிலத்தின் பர்கார் மாவட்டத்தில் இவர் பிறந்தார்.[2] இவர் ஒடிசாவின் சம்பல்புரி புடவைகளில் காணப்படும் இக்காட் என்ற கட்டு-சாயப் பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றவர் ஆவார்.[3] இவருடைய இத்தொழில்நுட்பம் சம்பல்புரி கைத்தறி தொழில்துறையின் வளர்ச்சிக்கு பெருமை சேர்த்தது.[4] 1998 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருது குஞ்ச பிகாரி மெகருக்கு வழங்கப்பட்டது.[5] 2009 ஆம் ஆண்டு நெசவு வடிவமைப்புக்கான தேசிய மையத்தின் கைவினைப் பொருட்களுக்கான தேசிய விருதையும் இவர் வென்றார்.[6] குஞ்ச பிகாரி மெகரின் மகன் சுரேந்திர மெகரும் ஒரு பிரபலமான நெசவாளர் ஆவார். [7]
குஞ்ச பிகாரி மெகர் Kunja Bihari Meher | |
---|---|
பிறப்பு | 1928 (அகவை 95–96) பர்கஃட் மாவட்டம், ஒடிசா, இந்தியா |
பணி | நெசவாளர் தலைமை கைவினைஞர் |
அறியப்படுவது | நாத சங்கீர்த்தனம் |
விருதுகள் | பத்மசிறீ கைவினைப் பொருட்களுக்கான தேசிய விருது |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Meet the Weavers and Dyers of Ikat". Strand of Silk. 2015. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் October 27, 2015.
- ↑ "ECourts" (PDF). ECourts. 2015. Archived from the original (PDF) on 16 October 2015. பார்க்கப்பட்ட நாள் October 27, 2015.
- ↑ "Surendra Kumar Meher". Paramparik Karigar. 2015. பார்க்கப்பட்ட நாள் October 27, 2015.
- ↑ "Sambalpuri Sari: Living tradition". Meri News. 20 November 2008. Archived from the original on 22 January 2016. பார்க்கப்பட்ட நாள் October 27, 2015.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on October 15, 2015. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
- ↑ "National Awards for the year 2009". National Centre for Textile Design. 2015. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் October 27, 2015.
- ↑ "Sant Kabir Award-2013" (PDF). Handloom Corporation of India. 2015. பார்க்கப்பட்ட நாள் October 27, 2015.