பூவரசு

தாவர இனம்
(குடசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பூவரசு
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: மெய்யிருவித்திலையி
தரப்படுத்தப்படாத: ரோசித்கள்
வரிசை: Malvales
குடும்பம்: மால்வேசியே
பேரினம்: தெசுப்பீசியா
இனம்: தெ. பாப்புல்னியா
இருசொற் பெயரீடு
தெசுப்பீசியா பாப்புல்னியா
(லி.) Sol. ex Corrêa[1]

பூவரசு (Thespesia populnea) சிறிய மரவகையைச் சார்ந்தது. வெப்பவலயப் பகுதிகளில் பரவலாகக் காணப்படும் இம் மரம், 5-10 மீட்டர் உயரம் வரை வளர்கிறது.

குடசம் தொகு

குடசம் என்னும் மலரைக் குறிஞ்சிப்பாட்டு வான்பூங் குடசம் என விளக்கிக் காட்டுகிறது.[2]

சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களும் இதனைக் குறிப்பிடுகின்றன. இதனை இக்காலத்தில் பூவரசம் பூ என்கின்றனர். பூவரச மரம் ஆற்றோரங்களில் மிகுதியாகய்க் காணப்படுவதால் இதனை ஆற்றுப்பூவரசு என்றும் வழங்குகின்றனர்.

சிறுவர்கள் பூவரச இலையைக் கூம்புபோல் சுருட்டி கூர்ப்பகுதியில் கொஞ்சம் கிள்ளிவிட்டு அதில் வாய் வைத்து ஊதி மகிழ்வர்.

அடிக்குறிப்பு தொகு

  1. "Thespesia populnea (L.) Sol. ex Corrêa". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2009-05-05. Archived from the original on 2009-02-21. பார்க்கப்பட்ட நாள் 2009-11-17.
  2. குறிஞ்சிப்பாட்டு 67
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவரசு&oldid=3564674" இலிருந்து மீள்விக்கப்பட்டது