குடா குகைகள்

குடா குடைவரைகள் (Kuda Caves) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில், தெற்கு கொங்கண் கடற்கரை பகுதியில், முராத்-ஜின்சிரா[1] தீவுக்கோட்டையின் வடக்கு கடற்கரையில் அமைந்த குடா எனும் கிராமத்தின் மலைக்குன்றில் அமைந்த 15 குடைவரைகளின் தொகுதியாகும். குடா குடைவரைகள் கிமு முதல் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகும்.[2]

குடா குடைவரைகள்
குடா குடைவரைகள்
குடா குடைவரைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
குடா குடைவரைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
குடா குடைவரைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
குடா குடைவரைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
ஆள்கூறுகள்18°17′07″N 73°04′23″E / 18.285214°N 73.073175°E / 18.285214; 73.073175

இக்குடைவரை சைத்தியத்தின் தாழ்வாரத்தில் கௌதம புத்தரின் சிறபங்கள் தாமரை, தர்மச்சக்கரம் மற்றும் நாகங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. பின்னர் கிபி 5-6-ஆம் நூற்றாண்டுகளில் இக்குடைவரைகளை மகாயனப் பிரிவின் பௌத்த பிக்குகள் கையகப்படுத்தி மேலும் குடைவரைகளில் மேலும் பல சிற்பங்களை செதுக்கினர்.[2] முதல் குடைவரையில் குடைவரை நிறுவ் நன்கொடை அளித்தவர்களின் பெயர் பொறித்த கல்வெட்டு உள்ள்து. ஆறாவது குடைவரையின் வாயிலில் ஒரு யாணைச் சிற்பங்கள் உள்ளது..[3]இக்குடைவரையை நிறுவ நன்கொடை வழங்கியவர்களின் பெயர்கள் இங்குள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது..[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Murud-Janjira
  2. 2.0 2.1 2.2 Ahir, D. C. (2003). Buddhist sites and shrines in India : history, art, and architecture (1. ed.). Delhi: Sri Satguru Publ. pp. 197–198. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170307740.
  3. Gunaji, Milind (2010). Offbeat tracks in Maharashtra (2nd ed.). Mumbai: Popular Prakashan. pp. 222–223. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8179915786.



"https://ta.wikipedia.org/w/index.php?title=குடா_குகைகள்&oldid=3341722" இலிருந்து மீள்விக்கப்பட்டது