குடிநிலை உரைத்தல்
புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் குடிநிலை உரைத்தல் என்பது ஒன்று. இது கரந்தைத் திணையின் துறை. புறநானூற்றில் இத்துறைப் பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. பாடல் எண் 290
இலக்கண நூல் விளக்கம்
தொகு- குடிநிலை உரைத்தல் தொல்காப்பியம் கூறும் ‘தார்நிலை’ [1] இத்துறையின்பாற் படும் என்பர். [2]
- புறப்பொருள் வெண்பாமாலை கரந்தைத் திணையின் 14 துறைகளில் இது ஒன்று. மூதாதையரின் தறுகண்மையைக் கூறுவது இத் துறை.[3]
- புறநானூற்றுத் திணை, துறை பகுப்புக்களுக்கு மூலமான, மறைந்துபோன பன்னிரு படலம் நூலிலிருந்து இந்தப் பகுப்புப் பெயர் தரப்பட்டுள்ளது.
இலக்கியம்
தொகுஔவையார் பாடிய இந்தப் பாடல் வீரன் ஒருவனின் முன்னோரின் செயலை அரசனுக்குச் சொல்லிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
அரசனின் தந்தைக்குத் தந்தை போரிட்டபோது, இவன் தந்தை அரசனுக்கு முன்னே நின்று பகைவரின் படைகள் தாக்காவண்ணம் பாதுகாத்தானாம். மழைத்துளி விழாமல் தடுக்கும் ஓலைக்குடை போல் இந்த அரசனின் பாட்டனுக்கு விளங்கினானாம்.
அடிக்குறிப்பு
தொகு- ↑ தொல்காப்பியம் புறத்திணையியல் 17
- ↑ புறநானூறு பழைய உரை, உ.வே.சாமிநாதையர் பதிப்பு
- ↑
மண் திணி ஞாலத்துத் தொன்மையும் மறனும்
கொண்டு பிறர் அறியும் குடிவரவு உரைத்தன்று- புறப்பொருள் வெண்பாமாலை 35