குடீ பாடவா என்பது மராத்தியரின் பண்டிகைகளில் ஒன்று. பத்வா என்ற சொல் சமசுகிருதத்தின் பிரதிபாத் என்ற சொல்லில் இருந்து தோன்றியது. பிரதிபாத் என்றால், நிலவு ஆண்டின் முதல் நாள். கயானா, திரினிடாட் போன்ற நாடுகளில் ஹோலி பண்டிகையை பக்வா என்று அழைக்கின்றனர். குதி என்றால் வெற்றிக் கம்பம் என்று பொருள். இந்து நாட்காட்டியின் சித்திரை மாதத்தின் முதல் நாள் (பெரும்பாலும் இந்நாள் மார்ச்சு மாதத்தில் வருகிறது) மராத்தியர்களின் புத்தாண்டின் முதல் நாளாக கொண்டாடப்படுகிறது. (இந்த நாள் தான் கன்னட, தெலுங்கு வருடப் புத்தாண்டு நாள் யுகாதியும் ஆகும்.) மராத்தியர்களின் வழக்கப்படி இந்த நாளில் இராமர் இராவணனைக் கொன்று சீதையுடன் அயோத்தி திரும்பினார். அயோத்தி மக்கள் இராமனின் வரவை குதி (வெற்றி கம்பம்) நட்டுக் கொண்டாடியதாகவும் கருதகின்றனர்.. ஆனால் வட இந்தியாவில் இந்நிகழ்ச்சி, தீபாவளி அன்று நடைபெற்றதாகக் கூறுவர். இந்த நாளில் மக்கள் புதுத் துணிகள், நகைகள் வாங்குவர். புதிய செயல்களைத் தொடங்க நன்னாளாக இந்நாள் உள்ளது. இந்நாளில் குழந்தைகள் சரசுவதிக்குப் பூசை செய்வர். இந்த நாளில் பிரம்மன் உலகைப் படைத்ததாகவும் நம்புகின்றனர். இந்நாளில் புரான் போலி, புந்து பாக் போன்ற சிறப்பு இனிப்புகளும் செய்யப்படுகின்றன.[1]

குடீ பாடவா
குடீ பாடவா அல்லது சம்வத்சர் பட்வோ
கடைபிடிப்போர்மராத்தியர், கொங்கணியர், தெலுங்கர், கன்னடியர்
வகைசந்திர நாட்காட்டி
கொண்டாட்டங்கள்1 நாள்
நாள்மார்ச்/ஏப்ரல்
நிகழ்வுஆண்டுக்கு ஒரு முறை
தொடர்புடையனஇந்து நாட்காட்டி

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.hindujagruti.org/hinduism/festivals/gudhipadwa

மேலும் பார்க்கவும்

தொகு

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடீ_பாடவா&oldid=3581714" இலிருந்து மீள்விக்கப்பட்டது