தெலுங்கர்
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு
(தெலுங்கு மக்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தென் இந்தியாவின் ஆந்திர மாநிலம், தெலுங்கானா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டு தெலுங்கு மொழி பேசும் மக்கள் தெலுங்கர் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் இந்தி மற்றும் வங்காளம் மொழிகளுக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பேசப்படும் மொழி தெலுங்கு.[சான்று தேவை] ஏறத்தாழ எட்டரை கோடி பேர் தெலுங்கு பேசுவதாக இந்திய அரசின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. பூர்வீகம் ஆந்திரா என்றாலும் இந்தியாவின் பிற மாநிலங்களான கருநாடகம், மகாராட்டிரம், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியிலும் தெலுங்கர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் மொரீசியசு, மலேசியா, கனடா ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றனர்.[1][2][3]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கருநாடகம், தமிழ் நாடு, ஒடிசா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார். | |
மொழி(கள்) | |
தெலுங்கு | |
சமயங்கள் | |
இந்து சமயம் கிறிஸ்தவம், இஸ்லாம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
தமிழி |
குறிப்பிடத் தக்கவர்கள்
தொகு- மு.கருணாநிதி தமிழக முன்னாள் முதலமைச்சர்
- ஆற்காடு வீராசாமி தமிழக முன்னாள் அமைச்சர்
- வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் -கம்மவார் நாயுடு
- எ. வா. வேலு தற்போதைய தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர்
- டி. கே. எம். சின்னையா தமிழக முன்னாள் அதிமுக அமைச்சர்
- ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை மாகாண முதல்வர் (1947-1949)
- சாத்தூர் ராமச்சந்திரன் தற்போதைய தமிழக பேரீடர் மேலாண்மை வருவாய்துறை அமைச்சர்
- கே. என். நேரு தற்போதைய தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர்
- துரைசாமி நெப்போலியன் திரைப்பட நடிகர் மற்றும் முன்னாள் நடுவண் இணையமைச்சர்
- வி. வைத்தியலிங்கம் முன்னாள் புதுவை முதல்வர்
- கி. ராஜநாராயணன் -எழுத்தாளர் - சாகித்ய அகாடமி விருது பெற்றவர்
தொடர்புடைய இனக்குழுக்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Telugu population figure worldwide". Ethnologue. March 2023. https://www.ethnologue.com/language/tel.
- ↑ "Scheduled Languages in descending order of speaker's strength - 2011" (PDF). Registrar General and Census Commissioner of India.
- ↑ "Telugu population in US grow 4-fold in 8 years, language among most-spoken". India Today (in ஆங்கிலம்). 2024-06-27. பார்க்கப்பட்ட நாள் 2024-08-10.