கூட்டன்பர்கு திட்டம்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
குட்டன்பேர்க் திட்டம் (Project Gutenberg), இணையத்தில் மின்னூல்களை வெளியிடும் திட்டங்களின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. 1971 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், 1990 ஆம் ஆண்டிலிருந்து வேகம் பெற்று, தொடர்ந்து செயற்பட்டு வருகிறது. இதுவரை 19,000 நூல்கள், மின்னூல்களாக ஆக்கம்பெற்று, வெளியிடப்பட்டுள்ளன.
குட்டன்பேர்க் திட்டம், இணையவழியாக ஆயிரக்கணக்கான மின்னூல்களைக் கொண்டு, உலகிலேயே மிகப் பெரிய திட்டமாக விளங்குகிறது. மிக்கேல் ஹார்ட் என்பார் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் தளத்தில் ஆங்கிலம், எசுப்பானியம் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் மின்னூல்கள் உள்ளன. இவை காப்புரிமையற்றவை என்பதால் இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.
மின்னூல்கள் மட்டுமின்றி, ஒலிக்கோப்புகளும் கிடைக்கின்றன. நூற்றுக்கணக்கான இணைய ஆர்வலர்கள் இணைந்து, இத்தளத்தின் மேம்பாட்டிற்கு உதவி வருகின்றனர். அதிகம் படிக்கப்பட்ட நூல்கள், சிறுவர்க்கானவை என்று வகைப்படுத்தப்பட்ட பலவகை மின்னூல்கள் கிடைப்பது இத்தளத்தின் சிறப்பு. விக்கிப்பீடியா போன்றே, மின்நூல்களுக்கான களஞ்சியம், என்பதால், யார் வேண்டுமானாலும் தொகுக்கலாம் என்பதும் திறந்த மூலம் என்பதும் இதன் சிறப்பு.
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளி இணைப்பு
தொகு