குடவாழை (நெல்)

(குடைவாழை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குடவாழை (Kudavazhai) பாரம்பரிய நெல் வகைகளில் முக்கிய இடம்பிடித்துள்ள இந்த நெல் இரகம், இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரவும், உவர் நிலத்தைத் தாங்கி வளரவும், கடலோரப் பகுதியில் கடல் நீர் உட்புகும் நிலத்தில் சாகுபடி செய்யவும் ஏற்ற இரகமாகும். தமிழகத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம் வட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் இருந்துள்ளன. அந்த வகைகளில், இந்தப் பாரம்பரிய நெல் வகைகளைச் சாகுபடி செய்யும் வழக்கம் வேதாரண்யம் உழவர்களிடம் இன்றைக்கும் உள்ளது.[1]

குடவாழை
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
130 - 140 நாட்கள்
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

பெயரிடல் காரணம்

தொகு

குடவாழை என்றழைக்கப்படும் இந்நெல் இரகம், சிவப்பு நிற நெல்லையும், சிவப்பு நிற அரிசியையும் உடையது. சுமார் 130 நாட்களில் அறுவடை வயதுடைய இந்த நெல் இரகம், மோட்டா (தடித்த) வகையைச் சார்ந்ததாகும். மூப்படைந்த நிலையில் இந்நேல்லின் கதிர்கள் நான்கு திசைகளிலும் குடை விரித்ததுபோல் காணப்படும். அதனாலேயே இதற்குக் ‘குடைவாழை’ என்ற பெயர்பெற்றது.[1]

கிடை அவசியம்

தொகு

தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் இந்த நெல் இரகம், விதைபிற்கு பின் ஒரு முறை மழை பெய்துவிட்டால் போதும், மூன்று நாட்களில் விதை முளைத்து நிலத்தின் மேல் பச்சைப் போர்வை போற்றியது போல் காட்சியளிக்கும். மிக வேகமாகவும், இயற்கைச் சீற்றங்களைத் தாங்கியும் வளரும் தன்மை கொண்ட இந்த இரகத்துக்குக் கோடையில் ஆடு, மாடு கிடை அமைத்து நிலத்தை வளப்படுத்துவது அவசியம்.[1]

பலதரப்பட்ட பலகாரம்

தொகு

அனைத்துப் பலகாரங்களைச் செய்வதற்கும் ஏற்ற நெல் (அரிசி) இரகமான இது, பழைய சாதம் அல்லது நீராகாரமாக வயலுக்கு எடுத்துச் செல்வார்கள். காலை, மதியத்துக்கு இடையே ஒரே வேளை பகல் உணவாகப் பழைய சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு, கொஞ்சமும் சோர்வு அடையாமல் வேலை செய்யும் தெம்பை தரக்கூடியது.[1]

மருத்துவப் பங்கு

தொகு

நீரிழிவு நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் திறன் குடவாழை, குடலைச் சுத்தப்படுத்துவதிலும், மலச்சிக்கல் இல்லாமல் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.[1]

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "உடலுக்குத் தெம்பு தந்து மருந்தாகும் குடவாழை". தி இந்து (தமிழ்) - ஏப்ரல் 18, 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-12-23.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடவாழை_(நெல்)&oldid=3722481" இலிருந்து மீள்விக்கப்பட்டது