குட்டிக்கிருஷ்ண மாரார்
குட்டிக்கிருஷ்ண மாரார் (Kuttikrishna Marar) (14 ஜூன் 1900 - 6 ஏப்ரல் 1973) கேரளாவின் பட்டாம்பியில் பிறந்த ஒரு இந்திய எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர் ஆவார். இலக்கிய விமர்சகத் துறையில் அவர் தவறாக உணர்ந்த எதையும் கேட்கத் தயங்கியதில்லை. இலக்கியத்தில் ஆராதனை மற்றும் பிரதிபலிப்புக்கு எதிர்ப்புக் காட்டவும் அவர் தயங்கவில்லை. பாரதபர்யதனம் குறித்த அவரது படைப்பு, மகாபாரதத்தை விமர்சன ரீதியாக ஆய்வு செய்து பல சிறப்புகளைப் பெற்றுத் தந்தது. ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இது உள்ளது.
குட்டிக்கிருஷ்ண மாரார் | |
---|---|
பிறப்பு | 14 ஜூன் 1900 பட்டாம்பி |
இறப்பு | 6 ஏப்ரல் 1974 கோழிக்கோடு, கேரளா, இந்தியா | (அகவை 73)
புனைபெயர் | குட்டிக்கிருஷ்ண மாரார் |
தொழில் | எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், |
தேசியம் | இந்தியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | பாரதபர்யதனம், கலா ஜீவிதம் தன்னே, மலயாளசைலி, சாகித்தியபூஷணம், ராஜாங்கணம் |
விருதுகள்
தொகுபட்டாம்பியில் உள்ள சமஸ்கிருத கல்லூரியிலிருந்து சாகித்திய சிரோன்மணி தேர்வில் தேர்ச்சி பெற்றார். கேரளா கலாமண்டலத்தில் சாகித்யாச்சாரியா பணியைத் தொடங்கினார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மகாகவி வல்லத்தோள் நாராயண மேனனுடன் இருந்தார், மேலும் அவரது எழுத்துக்களில் பலவற்றை வெளியிட்டார். 1938 முதல் 1961 வரையான காலப்பகுதியில் அவர் மலையாள நாளேடான மாத்ருபூமி புத்தகத்தின் பிழைதிருத்துபவராக (proofreader) இருந்தார். 1967 ஆம் ஆண்டில், பட்டாம்பி ஸ்ரீ நீலகண்ட சமஸ்கிருத கல்லூரியிலிருந்து ”சாகித்திய ரத்னம் விருது” மற்றும் திருப்புனித்தூரா சமஸ்கிருதக் கல்லூரியின் 'சாகித்திய நிபுணன்’ விருதினையும் பெற்றார். அவர் எம். பி. பால் விருது மற்றும் 1966 ஆம் ஆண்டு கேந்திர சாகித்திய அகாதமி விருது (மலையாளம்) பெற்றார்.[1]
மலையாளசைலி எனும் நூல் மலையாளமொழி பயணத்திற்கு உதவும் நம்பகமான நூல்களில் ஒன்றாகும். மாராரின் இன்னொரு முக்கியமான படைப்பான, மகாபாரதத்தின் காவியங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் பாரதபர்யதனம் (பாரத மூலம் பயணம்) மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பாரதப் பர்யதனம், சாகித்தியசல்லாபம், தந்தகோபுரம், கைவிளக்கு (இலக்கிய விமர்சனங்களின் தொகுப்புகள்) இவரது இலக்கிய விமர்சனப் படைப்புகளாகும் மேலே உள்ளவற்றுடன், இலக்கிய விமர்சனங்களில் 19 க்கும் அதிகமான இவரது கட்டுரைகள் உள்ளன.
ஏப்ரல் 6, 1973 இல் அவர் இறந்தார்
குறிப்புகள்
தொகு- ↑ "Sahitya Akademi Awards 1955-2007". sahitya-akademi.gov.in. Archived from the original on August 28, 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-10-17.