குட்டை புதர் செடிகள்

குட்டை புதர் செடிகள் அல்லது குறுஞ்செடிகள் தரைக்கு மேல் தண்டுடன் கூடிய சிறிய செடி வகை ஆகும்.[1] இது ஓராண்டு, ஈராண்டுகள் மற்றும் பல்லாண்டுகள் வாழக்கூடிய தாவர வகையை சார்ந்தது.[2]

Trientalis latifolia (Broadleaf Starflower) is a perennial herbaceous plant of the ground layer of forests in western North America.

ஓராண்டு வழக்கூடிய குறுஞ்செடியானது, ஓராண்டுக்குள் வளர்ந்து, பூத்து, காய்த்து, கனிகளை உருவாக்கி, செடியானது இறந்துவிடும். குறுஞ்செடி மீண்டும் விதையில் இருந்து முளைக்க தொடங்கும். .[3]

ஈராண்டு மற்றும் பல்லாண்டு வாழக்கூடிய குறுஞ்செடியானது அதன் ஆயுட்காலம் முடிந்ததும் தாவரத்தின் ஒரு பகுதியானது தரைக்கு கீழ் பதுதியிலோ அல்லது தரையை ஒட்டிய பகுதியிலோ வாழும்.

ஈராண்டு தாவரங்கள் தனது இரண்டாம் ஆண்டு பூத்து காய்த்து மடியும். புதிய தாவரமானது தரையை ஒட்டிய அல்லது தரைக்கு கீழ் உள்ள உயிருள்ள தாவரப்பகுதில் இருந்து முளைக்க தொடங்கும். அவையாவன வேர், தண்டுcaudex தரையை ஒட்டிய தடித்த தண்டு பகுதி, அல்லது பலவகையான தரைகீழ்தண்டுகள், முறையே கிழங்குகள், தரைகீழ்தண்டுகள், வேர்தண்டுகள் மற்றும் வேர்கிழங்குகள்.

ஈராண்டு வாழக்கூடிய குட்டைசெடிகளுக்கு உதாரண்ம் கேரட், பார்ஷ்னிப் மற்றும் common ராக்வோர்ட்; பல்லாண்டு வாழும் குட்டை செடிகளுக்கு உதாரணம் உருளை கிழங்கு, பியோனி (பெரிய வெளிர்ச் சிவப்பு மலர்கள் கொண்ட தோட்டச் செடி), ஹோஸ்டா, புதினா, சில புல் வகைகள்.

வேகமாக வளரும் குட்டைச்செடிகள் (குறிப்பாக ஓராண்டுத்தாவரம்) pioneers, சில குட்டை தாவரம் பெரிதாக வளரக்கூடியவைமியூசா வாழைமரம் இவ்வகையில் அடங்கும். பல்லாண்டு வாழும் சில குட்டை தாவரம் இரண்டாம்நிலை வேரில், வளர்ச்சி வளையத்தை உருவாக்குவதை கொண்டு அதன் வயது தீர்மானிக்கப்படுகின்றனன, இம்முறைக்கு ஹெர்ப்குரோனாலஜி herbchronology என்று பெயர்.

References தொகு

  1. Flora of the British Isles, Clapham, Tutin, and Warburg, 2nd edition
  2. Solomon, E.P.; Berg, L.R.; Martin, D.W. (2004). Biology. Brooks/Cole Thomson Learning. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-534-49547-3. http://books.google.ca/books?id=UCUxpgfcoNsC. 
  3. Levine, Carol. 1995. A guide to wildflowers in winter: herbaceous plants of northeastern North America. New Haven: Yale University Press. page 1.

வார்ப்புரு:Botany

"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டை_புதர்_செடிகள்&oldid=3863793" இலிருந்து மீள்விக்கப்பட்டது