குட்லெட் மேல்நிலைப் பள்ளி

(குட்லெட் மேனிலைப்பள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குட்லெட் மேல்நிலைப் பள்ளி என்பது தமிழ்நாட்டில், வேலூர் மாவட்டம், சோளிங்கர் பேருராட்சியில் அமைந்திருக்கும் ஒரு அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியாகும். இப்பள்ளி தென்னிந்தியத் திருச்சபையால் இயக்கப்படும் பள்ளிகளில் ஒன்றாகும்.

குட்லெட் மேல்நிலைப் பள்ளி
குட்லெட் மேல்நிலைப் பள்ளி
முகவரி
சோளிங்கர்
வேலூர், தமிழ்நாடு 631102
 இந்தியா
தகவல்
குறிக்கோள்இயேசு சொன்னார்: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.
தொடக்கம்1885
பள்ளி அவைதமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை
ஆணையம்தென்னிந்தியத் திருச்சபை
தலைமை ஆசிரியர்ஜே.டி. தினகரன்
இணையம்
பள்ளியின் பனோரம காட்சி

வரலாறு தொகு

1885 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து மிஷ்னரி இயக்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி , பின்பு 1912 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பிரிஸ்பிடேரியஸ் இயக்கத்தால் பொறுப்பேற்று நடத்தப்பட்டு வந்தது. அப்போது இப்பள்ளி ஏ.பி.எம் பள்ளி என்ற பெயரில் இயங்கி வந்தது. 1917 ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளி அடுத்த நான்கு ஆண்டுகளில் நடுநிலைக்கல்விக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றது. 1945 ஆம் ஆண்டு உயர்நிலைக்கல்விக்கு கல்வித்துறையிடம் விண்ணப்பித்த போது, போதிய இடவசதி இல்லாததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் முடிவுக் காலமாக இருந்ததாதால், இராணுவ தடவாளங்களெல்லாம் இடம் பெயர்ந்து கொண்டிருந்தன. இந்நிலையில் ஒரு மிகப்பெரிய இராணுவ மருத்துவமனை காலி செய்யப்பட்டு, அது செயல்பட்டு வந்த இடம் மற்றும் கட்டிடம் காலியாக இருந்தது. இதை அறிந்த பள்ளி நிர்வாகம், அம்மருத்துவமனையை பள்ளியாக மாற்றிக் கொள்ள முடிவெடுத்தது. மருத்துவமனைக்கான இடத்தைப் பெற்ற பள்ளி நிர்வாகம் 1946 ல் குட்லெட் நினைவு மருத்துவமனையில் ஏ.பி.எம் பள்ளியை செயல்படுத்தத் தொடங்கியது. அம்மருத்துவமனையை நிறுவிய குட்லெட்டின் நினைவாக பள்ளிக்கு குட்லெட் என்கிற பெயர் மாற்றமும் செய்யப்பட்டது. தற்போது மேல்நிலை வகுப்புகள் வரைக் கொண்டுள்ள இப்பள்ளி குட்லெட் மேல்நிலைப் பள்ளி என அழைக்கப்படுகிறது. பள்ளியின் முன்புறம் "குட்லெட் மருத்துவமனை 1917" என ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இன்னும் உள்ளது.

பள்ளி பாடல் தொகு

 


மேற்கோள்கள் தொகு