குண் தெமூர் கான்

குண் தெமூர் (மொங்கோலியம்: Гүнтөмөр; மொங்கோலிய எழுத்துமுறை: ᠭᠦᠩ ᠲᠡᠮᠦᠷ; மரபுவழிச் சீனம்: 坤帖木兒) என்பவர் வடக்கு யுவான் அரசமரபின் ஒரு ககான் ஆவார். இவர் 1400 - 1402இல் ஆட்சிபுரிந்தார். எர்தெனீன் தோப்சி நூலின்படி, குண் தெமூர் எல்பெக் நிகுலேசுக்சி கானின் மூத்த மகன் ஆவார். ஆனால், சசரத் உல் அத்ரக் மற்றும் அபீப் அல் சியார் போன்ற நூல்களின் பதிவுப்படி இவர் செங்கிஸ்கானின் பிற வழித்தோன்றல் என்று குறிப்பிடப்படுகிறது. இவர் ஒருவேளை அரிக் போகேயின்[3] வழித்தோன்றலாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. இவரது பெயரான குண் தெமூருக்கு மொங்கோலிய மொழியில் "(சிந்தனை இன்பத்தில் ) ஆழ்ந்த நாட்டமுடைய இரும்பு" என்று பொருள்.

தோகோகன் கான்
托歡汗
ᠲᠣᠭᠣᠭᠠᠨ ᠬᠠᠭᠠᠨ
மங்கோலியர்களின் ககான்
வடக்கு யுவான் அரசமரபின் ககான்
ஆட்சிக்காலம்1399–1402
முடிசூட்டுதல்1400
முன்னையவர்எல்பெக் நிகுலேசுக்சி கான்
பின்னையவர்ஒருக் தெமூர் கான்
பிறப்பு1377[1]
இறப்பு1402 (அகவை 24–25)
குழந்தைகளின்
பெயர்கள்
தோகோகன் கான்[2]
மரபுபோர்சிசின்
அரசமரபுவடக்கு யுவான் அரசமரபு
தந்தைஎல்பெக் நிகுலேசுக்சி கான்

ஆட்சி தொகு

அமியில் இருந்த காரா தெல் அரசின் மீது தனது அதிகாரத்தை நிலை நிறுத்தும் ஒரு முயற்சியாக மிங் அரசமரபுடன் இணைந்த என்கே தெமூரை குண் தெமூர் கொன்றார்.[4]

1402இல் குண் தெமூர் குலிச்சியால் தோற்கடிக்கப்பட்டார். குலிச்சி ஒருவேளை அருக்தையுடன் கூட்டணியில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் விளைவாகக் குலிச்சி குண் தெமூரைக் கொன்றார். இவரது இறப்பிற்குப் பல மாதங்கள் கழித்து வடக்கு யுவான் அரசமரபின் அரியணைக்கு இவரது தம்பி ஒல்ஜெயி தெமூர் கான் புண்ணியசிறீ பதவிக்கு வந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. Tsagaan Sechen-Erdenyin Tobchi
  2. Chinggisid rulers (part 1)
  3. 宝音德力根, Buyandelger (2000). "15世紀中葉前的北元可汗世系及政局 (Genealogy and political situation of the Northern Yuan Khans of the mid-15th century)". 蒙古史研究 (Mongolian History Research) 6: 132–136. 
  4. The Cambridge History of Inner Asia: The Chinggisid Age, (edited by Nicola Di Cosmo, Allen J. Frank and Peter B. Golden), September 28, 2009. ISBN 978-0521849265. p. 162.
குண் தெமூர் கான்
இறப்பு: 1402
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
எல்பெக் நிகுலேசுக்சி கான்
வடக்கு யுவானின் ககான்
1400–1402
பின்னர்
ஒருக் தெமூர் கான்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்_தெமூர்_கான்&oldid=3866526" இலிருந்து மீள்விக்கப்பட்டது