எல்பெக் நிகுலேசுக்சி கான்
நிகுலேசுக்சி கான் (மொங்கோலியம்: Нигүүлсэгч хаанᠨᠢᠭᠦᠯᠡᠰᠦᠭᠴᠢ; மரபுவழிச் சீனம்: 尼古埒蘇克齊汗) என்பவர் வடக்கு யுவான் அரசமரபின் ஒரு கானாவார். இவர் 1394 முதல் 1399 வரை ஆட்சி புரிந்தார். எர்தெனீன் தோப்சி என்ற நூலின்படி, இவர் சோரிக்து கானின் தம்பி ஆவார். அதே நேரத்தில், மற்ற வரலாற்றாளர்கள் இவர் பிலிகுது கானின் மகன் என்று குறிப்பிடுகின்றனர்.[1] இவர் 7 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தார். இவரது பட்டமானது "நிகுலேசுக்சி கான்" என்பதாகும். மொங்கோலிய மொழியில் இதன் பொருள் "கருணையுள்ள பேரரசர்" என்பதாகும். இவரது ஆட்சிக்காலத்தில் மிங் அரசமரபு மற்றும் ஒயிரட் கிளர்ச்சியால் எல்லைப்புறத்தில் சிறு சண்டைகள் ஏற்பட்டன.
நிகுலேசுக்சி கான் 尼古埒蘇克齊汗 ᠨᠢᠭᠦᠯᠡᠰᠦᠭᠴᠢ ᠬᠠᠭᠠᠨ | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மங்கோலியர்களின் ககான் | |||||||||||||
வடக்கு யுவான் அரசமரபின் ககான் | |||||||||||||
ஆட்சிக்காலம் | 1394–1399[1] | ||||||||||||
முடிசூட்டுதல் | 1394 | ||||||||||||
முன்னையவர் | என்கே கான் | ||||||||||||
பின்னையவர் | குண் தெமூர் கான் | ||||||||||||
பிறப்பு | 1362 | ||||||||||||
இறப்பு | 1399 (அகவை 36–37) | ||||||||||||
இராணி | கோபேகுந்தை | ||||||||||||
பட்டத்து இராணி | அழகிய பெண்ணான ஒல்ஜெயிடு | ||||||||||||
| |||||||||||||
மரபு | போர்சிசின் | ||||||||||||
அரசமரபு | வடக்கு யுவான் அரசமரபு | ||||||||||||
தந்தை | பிலிகுது கான் | ||||||||||||
தாய் | பேரரசி குவோன் |
ஆட்சி
தொகுஇவரது ஆட்சியின் போது ஒயிரட்கள் போர்சிசின் குடும்பத்தின் முதன்மை நிலைக்கு வெளிப்படையாகச் சவால் விடுக்க ஆரம்பித்தனர். வடக்கு யுவான் படையெடுப்புகளை மிங் அரசமரபானது முறியடித்தது. திசகான் செச்சென் என்பவரின் கூற்றுப்படி, அனைத்துத் தவறான காரணங்களுக்கும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
தைபூவின் குடும்பத்தில் இருந்து எதிர்ப்பைத் தடுப்பதற்காக, தைபூவின் மகனுக்கு இவர் தன் மகள் சமூர் குன்சை மணமுடித்துக் கொடுத்தார்.[2]
உகேச்சி காசிகா என்பவர் அந்நேரத்தில் ஒயிரட்களின் ஆட்சியாளராக இருந்தார். தனது பழங்குடியினங்கள் மீது ஒரு புதிய ஆட்சியாளரை நியமிக்கும் ககானின் முடிவை அவர் தடுத்து வந்தார். தன்னுடைய சொந்த உறவினர்களைக் கொன்ற வன்முறை குணம் கொண்ட கான் பேரரசராக இருக்கத் தகுதியற்றவர் என்று படுலாவைக் காசிகா இணங்க வைத்தார். படுலாவும் தனது தந்தையின் இறப்பிற்குப் பழிவாங்க விரும்பினார்.
1399இல் எல்பெக் நிகுலேசுக்சி ககான் நான்கு ஒயிரட் அரசால் தோற்கடிக்கப்பட்டார். அவர்களது தலைவர்கள், உகேச்சி காசிகா, மற்றும் படுலா ஆகியோரால் கொல்லப்பட்டார். இவரது இறப்பிற்குப் பல மாதங்கள் கழித்து இவரது மூத்த மகன் குண் தெமூர் கானுக்கு இவரது மகுடம் சூட்டப்பட்டது. இறந்த கானின் முதன்மையான பட்டத்து இராணியான கோபேகுந்தை இவருடன் ஒல்ஜெயிடுவின் தொடர்பு குறித்துப் பொறாமை கொண்டார். கோபேகுந்தை உகேச்சி காசிகாவுடன் இணைந்தார். காசிகா இவரின் அனைத்து உடமைகளையும் பறிமுதல் செய்தார்.
பிள்ளைகள்
தொகு- பட்டத்து இளவரசர் தூரேன் தெமூர்
- அஜை
- தைசுன் கான்
- அக்பர்சின்
- மந்தூல் கான்
- அஜை
- குண் தெமூர் கான்
- ஒல்ஜெயி தெமூர் கான்
- சமூர் குன்சை
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 宝音德力根, Buyandelger (2000). "15世紀中葉前的北元可汗世系及政局 (Genealogy and political situation of the Northern Yuan Khans of the mid-15th century)". 蒙古史研究 (Mongolian History Research) 6: 132–136.
- ↑ Weatherford (2010). The Secret History of the Mongol Queens: How the Daughters of Genghis Khan Rescued His Empire. p. 142.