குதிரையாறு
(குதிரை ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குதிரையாறு (Kuthiraiyar) திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கூக்கால் பகுதியில் உருவாகும் சிற்றாறு ஆகும்.[1] ஆண்டிப்பட்டி கிராமத்தில் சிற்றருவியாக விழுந்து குதிரையாறு அணையில் தேங்கி அங்கிருந்து வடக்கு நோக்கி பாப்பம்பட்டி, ரெட்டையம்பாடி கிராமங்களின் வழியாக, சுமார் 10 கி.மீ.ஓடி, திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கொழுமம் கிராமம் அருகில் அமராவதி ஆற்றோடு கலக்கிறது.[2]
பழங்காலப் பெயர்
தொகுசங்ககாலத்திற்குப் பின் இந்த ஆற்றுக்கு அசுவநதி என பெயர் வழங்கி வந்துள்ளது. (அசுவம்( வடமொழி) = குதிரை) இந்த அசுவநதி கொழுமம், அருகில் அமராவதி ஆற்றுடன் இணைந்து வடக்காக சென்று காவிரி ஆற்றுடன் இணைகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://sp.tn.gov.in/ta/district_details/562[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Kuthiraiyar_D00958
- ↑ கொழுமம், கொமரலிங்கம்- ஐவர்மலை- முனைவர். தி. மணோன்மணி- தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை வெளியீடு-2077.