குத்தம்புள்ளி சேலை

கேரள மாநிலம் குத்தம்புள்ளியில் தயாரிக்கப்படும் சேலை

குத்தம்புள்ளி சேலை என்பது இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள திருவில்வமலை கிராம பஞ்சாயத்தில் உள்ள குத்தாம்புள்ளி கிராமத்தைச் சேர்ந்த நெசவாளர்களால் பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் ஒரு புடவை வகையாகும். குத்தாம்புள்ளி சேலை இதன் சேலை முந்தானை வடிவமைப்பினால் தனித்து நிற்கிறது.[1]

வரலாறு

தொகு

1972ல் குத்தாம்புள்ளி கைத்தறி தொழில் கூட்டுறவுச் சங்கம் 102 உறுப்பினர்களுடன் பதிவு செய்யப்பட்டது. கன்னடத்தினைச் சேர்ந்த மக்கள் குத்தாம்புள்ளியில் வசிக்கின்றனர். இவர்கள் தேவாங்க செட்டியார் இனத்தினைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மூதாதையர்கள் பெங்களூர் மற்றும் மைசூர் பகுதியினைச் சேர்ந்தவர்கள். குத்தாம்புள்ளி கூட்டுறவுச் சங்கத்திற்கு குத்தாம்புள்ளியில் சொந்த கட்டிடமும் 814 உறுப்பினர்களும் உள்ளனர். செப்டம்பர் 2011-ல், குத்தாம்புள்ளி சேலை புவியியல் சார்ந்த குறியீட்டை அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் பெற்றது.[2][3] [4][5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Kuthampully Saree". external. Archived from the original on 2021-04-11. பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  2. "Kuthampully sarees get an IP address, weave history". Archived from the original on 2013-01-03. பார்க்கப்பட்ட நாள் 2012-06-13.
  3. "Kerala handloom to get international branding". Archived from the original on 2013-01-03. பார்க்கப்பட்ட நாள் 2012-06-13.
  4. "Kuthampully". Thiruvilwamala. பார்க்கப்பட்ட நாள் 2012-06-13.
  5. "Weaving a Devanga style". Keralalivenews. பார்க்கப்பட்ட நாள் 2012-06-13.
  6. "Kuthampully Kerala Saree".
"https://ta.wikipedia.org/w/index.php?title=குத்தம்புள்ளி_சேலை&oldid=3663484" இலிருந்து மீள்விக்கப்பட்டது