குந்துர்த்தி ஆஞ்சநேயலு
தெலுங்கு எழுத்தாளர்
குந்துர்த்தி ஆஞ்சநேயலு (Kundurti Anjaneyulu) (16 டிசம்பர் 1922 – 1982) ஒரு தெலுங்குக் கவிஞர். இவர் 1977ல் தெலுங்கு எழுத்தாளர்களுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். "வசன கவிதா பிதாமகடு" (உரைநடைக் கவிதைகளின் தந்தை) என்றும் அழைக்கப்படுகிறார். [1]ன்"பிரீ வெர்ஸ் பிரண்ட்" என்ற குழு இவரால் நிறுவப்பட்டு 1967 முதல் பரிசுகளை வழங்கி வருகிறது. "பிரீ வெர்ஸ் பிரண்ட் அறக்கட்டளை 31 ஜூலை 1979 அன்று ஐதராபாத்தில் நிறுவப்பட்டது. [2]
குந்துர்த்தி ஆஞ்சனேயலு | |
---|---|
பிறப்பு | 16 டிசம்பர் 1922 கோட்டவாரிபலேம், குண்டூர் மாவட்டம் |
இறப்பு | 1982 |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியா |
கல்வி | இளங்கலை |
கல்வி நிலையம் | ஆந்திரா கிருத்துவக் கல்லூரி, குண்டூர் |
வகை | எழுத்தாளர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | குந்துர்த்தி கிரிதுலு |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது |
துணைவர் | சுந்தரம்மாள் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mana Sanskriti (Our Culture)". Vepachedu Educational Foundation. பார்க்கப்பட்ட நாள் 17 July 2018.
- ↑ The Encyclopedia of Indian Literature, by Amaresh Datta, Volume 1, pp.307.