குன்டாலா அருவி

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு அருவி

குன்டாலா அருவி (Kuntala waterfalls) என்பது தெலங்காணா மாநிலத்தின், அடிலாபாட் மாவட்டத்திலுள்ள நெரடிகொன்டா மண்டலத்தினூடாகச் செல்லும் கடம் ஆற்றில் அமைந்துள்ள அருவி.[1] 147அடி உயரம் கொண்ட இவ்வருவி, தெலங்காணா மாநிலத்தில் உள்ள மிக உயர்ந்த அருவி.[2] ஐதராபாத்தில் இருந்து ஒருநாள் சுற்றுலாவுக்கான பொழுதுபோக்கிடமாகப் பெயர்பெற்றுள்ளது. 

குன்டாலா அருவி
குன்டாலா அருவி, தெலங்காணா
Map
அமைவிடம்குன்டாலா, அடிலாபாட் மாவட்டம்
வகைஅருவி
மொத்த உயரம்147 அடி

இவ்வருவி, கோன்டுகள் வாழும் அடர்ந்த காடுகளின் உள்ளே அமைந்துள்ளது. கோன்டி மற்றும் தெலுங்கு மொழிகளில் குன்டா என்பது குளம் எனப் பொருள்படும், குன்டாலு என்றால் குளங்கள் என்று பொருளாகும்.[3] பல குளங்களின் நீர் இணைந்து கடம் ஆற்றில் கலந்து பின் அருவியாக விழுகிறது. கடம் ஆற்றின் மூலம் உருவாகிய குன்டாலா அருவி இரண்டு அடுக்குகளாக விழுகிறது. கடுமழை பெய்தால், இரு தனித்தனி அருவிகளாகத் தோன்றுகிறது. இப்பகுதியில் காயத்ரி, பொசெரா என்ற இரு அருவிகள் உள்ளன.

போக்குவரத்து

தொகு
  • நெரடிகொன்டா வரை அரசுப் போக்குவரத்து இயக்கப்படுகின்றது. பின்னர் அங்கிருந்து அருவிக்குச் செல்லத் தனியார் வண்டிகள் வாடகைக்குக் கிடைக்கின்றன. அருவியின் நுழைவாயில் வரை செல்ல உந்துவண்டிப் பாதை உள்ளது. நுழைவாயிலில் இருந்து அருவி பத்து நிமிட நடைபயண தொலைவில் உள்ளது. அங்கிருந்து அருவியின் அடிப்பகுதியை அடைய படிகள் உள்ளன.
  • ஹைதராபாத்தில் இருக்கும் இராஜிவ் காந்தி பன்னாட்டு விமான நிலையம் 310 கிமீ தொலைவில் உள்ளது.
  • அடிலாபாட் தொடர்வண்டி நிலையம் 58 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

சான்றுகள்

தொகு
  1. AuthorTelanganaToday. "Get wooed by wonderful waterfalls of Telangana". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-05-18. பார்க்கப்பட்ட நாள் 2019-05-18.
  2. Shanker, C. R. Gowri (2016-08-20). "Waterfalls come alive in Telangana after years-long gap". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-18.
  3. Brown, Charles Philip (27 January 2018). "A Telugu-English Dictionary. New ed., thoroughly rev. and brought up to date...2nd ed". Dsalsrv02.uchicago.edu. Archived from the original on 10 ஜனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குன்டாலா_அருவி&oldid=3929025" இலிருந்து மீள்விக்கப்பட்டது