குன்னங்குளம் சட்டமன்றத் தொகுதி

கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

குன்னங்குளம் சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தொகுதி. தலப்பிள்ளி வட்டத்தில் உள்ள குன்னங்குளம் நகராட்சி, சொவ்வன்னூர், எருமப்பெட்டி, கடங்கோடு, காட்டகாம்பால், போர்க்குளம், வேலூர், கடவல்லூர் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது. [1]. இது ஆலத்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இந்திய பொதுவுடைமை கட்சி (மாச்க்சிஸ்ட்) ஐ சேர்ந்த ஏ. சி. மொய்தீன் உள்ளார். கேரள சட்டமன்றத் தேர்தல், 2016 ல்  இவர் 63,274 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.பி ஜான் என்பவரைத் தோற்கடித்தார்[2].


மேற்கோள்கள்

தொகு